Sunday, March 8, 2026

சிவவாக்கியர் பாடல் : காய கல்பம் & காயசித்தி

சிவவாக்கியர் பாடல் : காய கல்பம் & காயசித்தி March 10, 2015 சிவாயம் என்னும் அட்சரம் சிவம் இருக்கும் அட்சரம் உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் கபாடம் அற்ற வாயிலை கடந்து போன வாயுவை உபாயமிட்டு அழைக்குமே சிவாய ஐந்தெழுத்துமே இந்தப் பாடலில் கபாடம் அற்ற வாயிலை கடந்து போன வாயுவை உபாயமிட்டு அழைக்குமே சிவாய ஐந்தெழுத்துமே என்றால் பஞ்ச இந்திரிய சத்திகள் ஐந்தும் பிரணவத்தில் சேர்க்கும் வகை – வழி அறிந்தவர்க்கு – அவர்கள் இது நாள் வரை செலவழித்த பிராணனை , அந்த பஞ்ச இந்திரிய சத்திகளும் திரும்ப அழைத்து விடுமாம் ( called ” Reverse Ageing ” in english ) அதனால் அவர்கள் இளமையை திரும்ப அடைந்து விடுவார்கள் என்று தன் அனுபவத்தைப் பாடுகின்றார் சிவவாக்கியர். ஆக , பஞ்ச இந்திரிய சத்திகள் ஐந்தையும் பிரணவத்தில் சேர்க்கும் வழி வகை அறிவதே காய கல்ப – காய சித்திக்கு வழி என்றுரைக்கின்றார் சிவவாக்கியர். வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.