Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 17, 2026
ஆறு ஆதார சக்கரங்கள் – தெளிவான பார்வை “
ஆறு ஆதார சக்கரங்கள் – தெளிவான பார்வை “
ஆதாரம் - மேலும் கீழும்
இதை கூறியவுடன் , விபத்து நடந்த இடத்துக்கு வந்தவுடன் , எப்படி காவல் அதிகாரி , அந்த இடத்தை சுற்றி படம் வரைவாரோ ??
அந்த மாதிரி , உடன் நம் அன்பர்கள் – குரு :
முதுகுத்தண்டின் அடி - மூலாதாரம் என ஆரம்பித்து , புருவ மத்தி ஆக்ஞா என பல வண்ண படம் போட்டு காட்டுவர்
அதுக்கு தேவதைகள் வண்ணம் எழுத்து என ஆரம்பித்துவிடுவார்
இது கீழ் ஆதாரம்
இதுக்கு ஞானத்துக்கும் எந்த சம்பந்தமுமிலை
இதை ஆன்ம சாதகன் பயன்படுத்தமாட்டான்
அப்படி பயன்படுத்தினால், அவன் ஞானம் அடையவே மாட்டான்
அதை கற்றுக்கொடுக்கும் குரு சரியிலை என பொருளாம்
குறிப்பாக , சன்மார்க்கத்தில் இருக்கும் ஆன்ம சாதகன் , பயன்படுத்தவே மாட்டான்
அவன் பயன்படுத்தும் ஆதாரம் – சிரசில் இருக்கு
படம் காண்க . தெளிவாக புரியும்
மேல் ஆதாரத்தில் ,
பிரணவம் மூன்று கண் இணைப்பில் உருவாவது
அதன் அடியில் மூலாதாரத்தில் – விநாயகன்
பிரணவத்தை தாங்கிக் கொண்டு இருப்பது
சுவாதிட்டானம் – பிரமன் அயன்
மணிபூரகம் – திருமால்
அனாகதம் – ருத்திரன்
விசுத்தி – மகேசன்
உச்சி – குண்டலினி – சுப்பிரமணி
தெய்வம் எங்காவது துர் நாற்றம் அடிக்கும் இடத்தில் இருக்குமா ?? ( இது சாலை ஆண்டவர் கூறியது - புதுக்கோட்டை )
அவர் இருப்பது தலையில் தான்
வெங்கடேஷ்
படம் :
1 கீழ் ஆதாரங்கள் - வண்ண வண்ண படம்
2 மேல் ஆதாரங்கள் – நான் கைப்பட வரைந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.