எல்லாம் தெரிந்தவன் ஆவது எப்படி ??
எல்லாம் தெரிந்தவன் ஆவது எப்படி ??
ஒரு துறையில் படித்து பட்டம் பெறுவதற்கு 25 வருடம் ஆகின்றது – அதில் நிபுணத்துவம் ( ஆராய்ச்சி – Ph D ) வேண்டும் என்றால் நம் வாழ்க்கையையே அதற்கு அர்ப்பணிப்பு செய்ய வேண்டி உள்ளது
இது ஒரு துறைக்கு மட்டுமே நம் வாழ்க்கையே போய்விடுகின்றது
அப்படியெனில் உலகில் உள்ள எல்லா துறையையும் படிப்பிலும் நிபுணத்துவம் வேண்டும் என்றால் என் செய்வது ?? – ஒரு ஜென்மம் போதாது = பல்லாயிரம் ஜென்மங்கள் வேண்டும் –
இது நடைமுறைக்கு ஒவ்வாத காரியம் எனில் இதனை நடைமுறைப்படுத்துவது எப்படி ??
ஒரு வழி உபாயம் இருக்கின்றது
அதாவது – எல்லாம் அறிந்த ஒரு பொருள் எதுவோ அந்த ஒரு பொருளை நாம் தெரிந்து கொண்டால் நாம் எல்லாம் அறிந்தவர்கள் ஆவோம் என்பது திண்ணம் – இது தான் விடை
அந்த ஒரு பொருள் யாதெனில் – அது தான் ஆன்மா
ஆன்மாவானது எல்லாம் அறிந்தது – முக்காலும் அறிந்தது – உணர்ந்தது – தகுதி உடையோர்க்கு முன் கூட்டியே கூற வல்லது
நாம் செய்ய வேண்டியது – ஆன்மாவை சரணடைந்து அதன் குணத்தை தன்மைகளை நம் ஜீவன் மீது பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் – அப்போது அது நமக்கு ( சாதகனுக்கு ) பல சகாயங்கள் செய்யும் – வருங்காலத்தை முன் கூட்டியே கூறி எச்சரிக்கை செய்யும் – மேலும் பல அளப்பரிய உதவிகள் வரும் – நாம் சற்றும் எதிர்பாரா உதவிகள் எல்லாம் வரும் –
இதில் ஒரு சிறிதும் ஐயம் வேண்டாம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.