Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
அருட்பா – அனுபவ மாலை - தவம் பெருமை
அருட்பா – அனுபவ மாலை - தவம் பெருமை
அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான்
ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி
முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும்
முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான்
விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக
வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க
பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப்
பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே
விளக்கம் :
திருவடி தவத்தின் அனுபவங்கள் எடுத்துரைக்கிறார் வள்ளல் பெருமான்
திருவடியால் அதன் கலப்பால் , பல நாதங்கள் ஒலிக்கும்
வீணை
முரசு
சங்கு
மணி என
பின் நன்மணம் உடலில் வீசும்
ஆண்கள் உடலில் போடும் scent நல்ல நறுமணமான வாசம் அடிக்கும்
அது சில சமயம் நீண்ட நேரம் கூட அடிக்கும்
தவம் முடிந்த பின் கூட அடிக்கும்
இது என் அனுபவங்கள்
நாதத்தில் மணி கேட்டிருக்கேன்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.