Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
லலிதா சஹஸ்ரநாமம் - ுழிமுனை உச்சி பெருமை
“ சுழிமுனை உச்சி பெருமை – ஆன்மா பெருமை “
லலிதா சஹஸ்ரநாமம் :
சாம்பவீ சாரதாராத்யா சர்வாணீ சர்மதாயினீ
சாங்கரீஶ்ரீகரீ ஸாத்வீ சரச்சந்த்ர நிபாநநா
சாதோதரீசாந்திமதீ நிராதாரா “ நிரஞ்ஜனா “
நிர்லேபா நிர்மலா நித்யா நிராகாரா நிராகுலா
நிர்குணா நிஷ்கலா சாந்தாநிஷ்காமாநிருபப்லவா
நித்யமுக்தா நிர்விகாரா நிஷ்ப்ரபஞ்சா நிராச்ரயா
நித்யசுத்தா நித்யபுத்தா நிரவத்யா நிரந்தரா
நிஷ்காரணா நிஷ்கலங்கா நிருபாதிர் நிரீச்வரா
நீராகா ராகமதனீ நிர்மதாமதநாசினீ
நிச்சிந்தா நிரஹங்காரா நிர்மோஹா மோஹநாசினீ
நிர்மமா மமதாஹந்த்ரீ நிஷ்பாபா பாபநாசினீ
நிஷ்க்ரோதா க்ரோதசமநீ நிர்லோபா லோபநாசினீ
நி:ஸ்ஸம்சயா ஸம்சயக்னீ நிர்ப்பவா பவநாசினீ
நிர்விகல்பா நிராபாதா நிர்ப்பேதா பேதநாசினீ
விளக்கம் :
ஒரு இடம் ஸ்தலம் எத்தனை அனுபவம் ஆன்ம சாதகனுக்கு அளிக்கிறது என நினைக்கும் போது புல்லரிக்குது ??
சுழி உச்சி அனுபவம் தான் அந்த இடம்
எங்கே எப்படி செய்து முடிப்பது சித்திக்க செய்வது என்ற நெடுநாளைய கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது
அதாவது ஆன்ம அனுபவம் கிட்டில் அது அளிக்கும் அனுபவம் தான் கீழ் காணும் இத்துணையும்
1 நிரஞ்ஜனா - பயம் பூஜ்யம் ஆகும் – வள்ளல் பெருமான் உரை நடையில் கூறி இருப்பது நடைமுறைக்கு வருவது இங்கே தான் என அறியணும்
2 நிராகாரா – உணவு தேவையில்லா நிலை – பிராணன் தான் உணவு
3 நிராகுலா – எந்த குலமும் இல்லா நிலை – அதாவது 96 தத்துவம் கடந்த உன்னத நிலை
4 நிர்குணா – முக்குணம் கடந்த நிலை
5 நிர்விகாரா – மன விகாரம் எதுவும் அற்ற தூய நிலை
6 நிச்சிந்தா – சிந்தனை எண்ண ஓட்டம் அற்ற மனோ நிலை
7 நிரஹங்காரா – அகங்காரமாகிய அசைவு ஒழிந்த நிலை
8 நிர்மோஹா – பெண் மோகம் ஒழிந்த நிலை
9 நிஷ்க்ரோதா – குரோதம் அற்ற நிலை
10 நிர்விகல்பா / நிர்ப்பேதா பேதநாசினீ – பேதம் வித்தியாசம் அற்ற சம நிலை
11 நிர்மலா – மும்மலம் நீங்கிய சுத்த நிலை
ஆக இத்துணை அனுபவமும் ஒருசேர கிட்டும் இடம் தான் சுழி உச்சி ஆகிய ஆன்ம ஸ்தானம் ஆகிய வெட்ட வெளி – ப கரக்குழி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.