Thursday, March 5, 2026

மூன்று படிகள்- முழுமை அடைவதற்கு

மூன்று படிகள்- முழுமை அடைவதற்கு தற்போதைய நிலை : அசுத்த ஜீவன் படி 1 : சுத்த ஜீவன் – இதனைத்தான் வள்ளலார் கீழ்ப் பச்சைத் திரை நீக்கினால் – சுத்தன் புனிதன் புருஷோத்தமன் ஆகலாம் என்கின்றார் மேலும் இந்த அனுபவத்தைப் பற்றி ” கண்புருவப் பூட்டு ” என்று பாடுகின்றார். இருப்பிடம் : சுழிமுனை வாசல் – கதவு மூடப்பட்டுள்ளது – அலிபாபா-40 திருடர்களும் ( MGR ) படத்தில் காட்டப்படும் கதவு இது தான் – மேலும் ஈஷா யோக மையத்தில் , குகையில் நுழைவில் இருக்கும் வாயில் இது தான் அனுபவம் : இரு திருவடிகள் இணைந்தால் இந்த வாயில் – கதவு திறக்கும் படி 2 : ஆன்மா சுத்த ஜீவனானது 36 தத்துவங்களை விட்டும் , மும்மலங்களை ஒழித்த பிறகும் , ஆன்மாவுடன் கலந்து அடையும் நிலை இருப்பிடம் : துவாதசாந்த வெளி – 12 வது படி இது தான் ஈஷா யோக மையத்தில் நடுவில் வைக்கபட்டிருக்கும் லிங்கம் ஆகும் புராண இதிகாசங்களில் , ஆன்மாவைத் தான் கிருஷ்ணனாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது படி 3 : பரமான்மா – APJ ஆண்டவர் ஆன்மா மேல் சத்தினிபாதம் என்னும் அருள் பதியும் போது இந்த அனுபவம் சித்திக்கும் – சிற்றம்பலக் கதவு திறக்கப் பெற்று உள்ளே நுழைந்து சிவம் ஆவோம் இருப்பிடம் : வெட்டவெளி – ஞானப் பெருவெளி நிலை : 17வது வெளி என்னும் சுத்த சிவதுரியாதீதம் சமயத்தில் இந்த அனுபவம் சிதம்பரம் கோவிலாகவும் , வள்ளலார் ஒரு படி மேல் சென்று உத்தர ஞான சிதம்பரம் என்றெல்லாம் கூறிவிட்டார். . வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.