Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
ஞான தேகம் – மாணிக்க வாசகரும் - வள்ளல் பெருமானும் “
ஞான தேகம் – மாணிக்க வாசகரும் - வள்ளல் பெருமானும் “
திருவாசகம் : திருவண்டப்பகுதி
மாணிக்க வாசகர் தம் ஞான தேக அனுபவம் :
அருளியது அறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து
உவாக்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப
வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய
அற்புதம் ஆன அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175
உள்ளம் கொண்டோர் உருச்செய் தாங்கு எனக்கு
அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்
கருணை வான்தேன் கலக்க 180
அருளொடு பரா அமுது ஆக்கினன்
பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே. 1
அருட்பா :
1 உருஅண்டப் பெருமறை என்றுலகமெலாம் புகழ்கின்ற
திரு அண்டப் பகுதி எனும் திரு அகவல் வாய் மலர்ந்த
குரு என்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவே நீ
இரு என்ற தனி அகவல் எண்ணம் எனக்கியம் புதியே.
(திருவருட்பா-2309)
2 மன்புருவ நடு முதலாமனம் புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவம் பெற் றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னும்
“இன்புருவம் “ ஆயினை நீ எழில் வாதவூர் இறையே.
இதில் வள்ளல் பெருமான் மாணிக்க வாசகர் பெற்ற ஞான தேகத்தை உறுதி செயும் அருட்பா தான் மேல் உள்ளது
இருவரும் உரைக்கும்
அள்ளூறாக்கை என்பதுவும் , இன்ப தேகம் என்பதுவும் ஞான தேகம் குறிப்பிடுவது தானே அல்லாது வேறல்ல
அது “ வாய் விட்டு உரைக்க முடியாத இன்ப அனுபவம் அளிப்பதாகும் – சொல்லிறந்த இன்பம் அளிப்பதாகும்
எல்லை இல்லாத – சொல்ல வார்த்தை இல்லாத அளவுக்கு இன்பம் அளிப்பதாகும் ஞான தேகம்
அது சுத்த சுகாதீத பெருவெளி – பெரு ஞ்சுக வெளி என்றெல்லாம் பெயர் பெறுகிறது
அது இறுதி நிலை அனுபவம் – 17 வது நிலை சுத்த சிவ சன்மார்க்கத்தின் உச்ச அனுபவம்
வள்ளல் பெருமானின் ஞான தேகம் அனுபவம் :
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 51
தன்அரசே செலுத்திநின்ற தத்துவங்கள் அனைத்தும்
தனித்தனிஎன் வசமாகித் தாழ்ந்தேவல் இயற்ற
முன்அரசும் பின்அரசும் நடுஅரசும் போற்ற
முன்னும்அண்ட பிண்டங்கள் எவற்றினும்எப் பாலும்
என்அரசே என்றுரைக்க எனக்குமுடி சூட்டி
“ இன்பவடி வாக்கி” என்றும் இலங்கவைத்த சிவமே
என்அரசே என்உயிரே என்இருகண் மணியே
இணைஅடிப்பொன் மலர்களுக்கென் இசையும்அணிந் தருளே.
இன்ப வடிவம் = ஞான தேகம்
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 46
துரியபதம் கடந்தபெருஞ் சோதிவரு கின்றார்
“ சுகவடிவந்” தரஉயிர்க்குத் துணைவர்வரு கின்றார்
பெரியபிர மாதியர்க்கும் அரியர் வருகின்றார்
பித்தர்என மறைபுகலும் சித்தர்வரு கின்றார்
இரிவகல்சிற் சபைநடஞ்செய் இறைவர்வரு கின்றார்
என்றுதிரு நாதஒலி இசைக்கின்ற தம்மா
உரிமைபெறும் என்தோழி நீயும்இங்கே சின்ன
ஒலிகேட்டுக் களித்திடுவாய் உளவாட்டம் அறவே
பொருள் :
துரிய பதம் கடந்த நிலையில் இருக்கும் அபெஜோதி வருகிறார்
ஞான தேகம் அளிக்க என் ஆன்மாவுக்கு துணைவர் வருகிறார்
சுக வடிவம் = இன்ப தேகம் ஆம் ஞான தேகம்
பிரமர்களுக்கும் - மூவர்க்கும் காண அரிதான பொருள் ஆம் என் ஆண்டவர் வருகிறார்
பித்தர் என மறை புகலும் - சித்சபையில் நடம் பயிலும் என் தெய்வம் வருகிறார் என்று பர நாதம் கேட்கிறது என்கிறார்
இறையின் வருகையை நாதம் முன்னமே தெரிவிக்கும்
உனக்கு உரிமை உள்ளதால் நீயும் இதை கேட்டு , மன வாட்டம் எல்லாம் நீங்கி களித்திடுவாய் முழுதுமே
அதனால் தான் வள்ளல் திருவாசகத்தை உற்று நோக்குங்கள் – இந்த மார்க்கத்து உண்மை புரியும் என்றார்
நம் அன்பர் அதை காற்றில் பறக்க விட்டார்
ஆகையால் மாணிக்க வாசகர் தான் ஞான தேகத்துக்கு முன்னோடி – சுத்த சன்மார்க்கத்துக்கும் சேர்த்து
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.