Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 10, 2026
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கருத்து :
1 எல்லா எழுத்துக்கும் அ கரம் தான் அடிப்படை
2 உலகுக்கு கடவுள் தான் அடிப்படை என்பது உலகளாவிய கருத்து
ஆனால் , இங்கு ஆதி பகவன் என்பதற்கு பதிலாக : ஆதி பகலன்" என்றிருந்தால் சரியாக இருக்கும்
இந்த உலகுக்கு ஆதியாகிய சூரியன் தான் அடிப்படை என்பது சரியாக இருக்கும் - சூரியன் இல்லையெனில் இந்த உலகம் இல்லை - ஜீவ ராசிகள் இல்லை
சமாதி = சமம் + ஆதி ஆதியாகிய ஆன்மாவுடன் ஜீவன்
சமம் ஆவது தான் ஜீவ சமாதி
இந்த அர்த்தத்தில் நோக்கில் ஆதியாகிய ஆன்ம சூரியன் தான் உலகுக்கும் உடலுக்கும் அடிப்படை
3 மேலும் அ கர நிலையில் விளங்கும் மௌனம் தான் எல்லா நாதத்துக்கும்
ஒலிக்கும் வாக்குக்கும் அடிப்படை
அங்கிருந்தே எல்லா நாதமும் கிளம்புகின்றது
பின்னர் தான் நம் செவிக்கு புலனாகுது
இந்த 4 வகை வாக்கு கூட இங்கிருந்தே அ கரமாகிய சுழி உச்சியில் இருந்து கிளம்புது
வைகரி
மத்திமை
பைசந்தி
சூக்குமை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.