Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 10, 2026
ஸ்ரீ சக்கரமும் வள்ளலாரின் சாகாக்கல்வியும்
ஸ்ரீ சக்கரமும் வள்ளலாரின் சாகாக்கல்வியும்
BG Venkatesh / June 22, 2017
ஸ்ரீ சக்கரம் = 43 முக்கோணங்கள் உள்ளன – சித்தர் பெருமக்கள் இதனை நன்கு அறிந்தே இம்மாதிரி அமைத்துள்ளனர்
சித்தர்கள் 36 தத்துவங்களை கடந்து ஆன்ம அனுபவம் பெற்று விட்டனர் என்பது உண்மை
வள்ளலின் சாகாக்கல்வியிலும் 43 படிகள் உள்ளன
இதில் 36 +7 = 43 படிகள் ஆகும்
என்ன ஒரு ஒற்றுமை ??
36 = 36 தத்துவங்கள்
7 = குரு துரியாதீதம் நிலைகள் ஆகும்
வள்ளல் தன் அகவலில்
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி
முதலில் 36 தத்துவங்கள் கண்ணால் பார்க்கும்படி காட்டினாராம் அருட்பெருஞ்சோதி
ஆறாறு கடத்திய அருட்பெருஞ்சோதி
பிறகு 36 தத்துவங்கள் கடக்கச் செய்தாராம் அருட்பெருஞ்சோதி
36 தத்துவங்கள் கண்ணால் நாம் நம் சாதனையின் வலிமையினால் பார்க்க வேண்டும் – எல்லோரும் உணர்தல் – புரிதல் என்னும் நிலையில் தான் இருக்கின்றனர் – ஆனால்
அனுபவம் என்னும் நிலை தான் உண்மை – முக்கியம்
இந்த சாதனா தந்திரம் வள்ளலும் சித்தர் பெருமக்களும் மறைத்து விட்டனர் – இது தெரியாமல் தான் கோடி கோடி சாதகர்கள், ஸ்வாமிஜி, பகவான்கள், மகரிஷிகள் , யோகிகள்
எல்லாம் மாண்டு போயினர்
அவர்கள் குரு மாண்டு போனதால் வள்ளலின் முத்தேக சித்தியை ( ஒளி தேகத்தை ) சந்தேகப்படுகின்றனர் – நான் எழுதுவதை உளறல் என்று அவர்கள் பிதற்றுகின்றார்கள் –
சாவதற்காக தான் எல்லோரும் பிறக்கின்றார்கள் என்று பதிலும் உரைக்கின்றனர்
36 தத்துவங்களை கடந்துவிட்டால் ஆன்மா நிலை தான் – ஆன்ம தரிசனம்
கடக்கும் சாதனம் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது
பின் 7 நிலைகளை கடந்தால் நாம் சாகா நிலையை அடையலாம்
எவன் ஒருவன் இந்த 43 சாகாகல்வி படிகளை கடக்கின்றானோ அவன் தான் மரணமிலாப் பெருவாழ்வு அடைவான் – அடையாத வரையில் பிறந்து இறந்து கொண்டே இருக்க வேண்டும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.