Saturday, March 21, 2026

உண்மைக் கடவுள் - உலகம் எப்படி மோசம் போய் இருக்கு ??

உண்மைக் கடவுள் - உலகம் எப்படி மோசம் போய் இருக்கு ?? அருட்பா உரை நடை - பேருபதேசம் இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. சரி எந்த உண்மை மறைத்தார் ?? எனில் ? இறையின் உண்மை நிலையினைத் தான் மறைத்துவிட்டார்கள் என வள்ளலார் புலம்புகிறார் அதாவது இதிகாசம் புராணம் வேதம் உபநிடதம் எல்லாம் உண்மைப் பொருளை மறைத்தே மறைத்தே பேசுதே அல்லாமல் நேரடியாக உரைக்கவில்லை அப்படியே உரைத்தாலும் , இறுதி நிலை தெய்வ நிலை குறித்து விளக்கம் அளிக்கவில்லை அதுக்கு தெரிந்தவரையில் விளக்குதே அல்லாமல் கடை நிலை அனுபவம் ஆம் அபெஜோதி சுத்த சிவம் நடராஜர் என உரைக்காமல் , ஐந்து தொழில் தலைவர் அவர்களால் உண்டாக்கப்பட்ட மதம் சடங்கு அதன் பெருமை அதன் பலாபலன்கள் தான் உரைக்கிறதே என கூறி , இதை தான் , இந்த மாபெரும் உண்மை மறைத்துவிட்டார் என மன வேதனைப்படுகிறார் வள்ளல் பெருமான் இந்த கூற்றை இன்னமும் ஆழமாக பார்த்தோமெனில் ? உலகம் எங்கும் பரவி நிற்கும் சமய மதம் எந்த நிலை வரை தத்தம் அறிவால் தலைவரால் சென்றுளது பார்க்கலாம் 1 கிறித்தவம் : இயேசு கிறிஸ்து உலகில் அனேகரால் பின்பற்றும் மதம் இவர் இறை செய்தி கொண்டு வந்தவர் – யோகி – அனுபவத்தே இருந்தவர் அவ்வளவே இறுதி நிலை அடையாத நபர் 2 இஸ்லாம் உலக பெரும்பான்மையில் ரெண்டாவது மதம் அல்லா தான் தெய்வம் அது ஆன்ம நிலை தான் இன்னும் மேலே போக வேண்டிய தூரம் இருக்கு 3 புத்த மதம் கிழக்கு ஆசிய நாடுகள் முழுமையும் இந்த மதம் தான் இந்த மதத்துக்கு ஆன்மா கடவுள் நம்பிக்கையில்லை பின் ஆரைத்தான் கடவுளாக வணங்குகிறார் என புரியல?? கௌதம புத்தர் ஒரு துறவி – அவ்வளவே – ஆன்ம அனுபவம் கூட பெறாத ஞானி ஆகையால் இவர் எல்லாம் உண்மை கடவுளுக்கு வெகு தூரத்தில் ஒளி ஆண்டுகள் பின் தங்கி இருக்கார் என்பதில் ஐயமில்லை 4 வைணவம் இதர சமய மதம் ஐந்து தொழில் தலைவர் அடிப்படையாக வைத்து பழக்கம் செய்யப்பட்ட சடங்கு உடை மதம் இது ஆன்மாவுக்கும் கீழ் நிலை – 36 தத்துவத்துக்கும் கீழே தான் மிக தாழ்வான தரம் அதனால் தான் உண்மை மறைத்துவிட்டார் என வள்ளலார் அறைகூவல் விடுக்கின்றார் 5 ஆனால் சைவத்தில் இறுதி நிலையாம் சுத்த சிவம் நடராஜர் தான் அபெஜோதி என அறுதியிட்டு கூறிவிட்டது பதிவிளக்கம் பாடல் ஊன்றி படித்தால் இந்த கூற்று புரியும் சைவத்தின் மேல் சமயமில்லை அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமில்லை என்பது சத்தியமான வார்த்தை இந்த மாபெரும் உண்மைகள் மறைத்துவிட்டார் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே – அன்றிலிருந்து மக்கள் இன்னமும் ஒளிக்கு உண்மை இறுதி நிலை அறியாமலே இருக்கின்றார் என்கிறார் வள்ளல் பெருமான் இதெல்லாம் ஜீவனின் பரிணாம வளர்ச்சிப்படிகள் மனிதர் ஏறுவதுக்கு தகுதி அடையணும் உலகம் தகுதி அடையவில்லை என்பது உண்மை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.