Friday, March 6, 2026

வள்ளலார் செய்த சாதனம் என்ன ??

வள்ளலார் செய்த சாதனம் என்ன ?? BG Venkatesh / February 2, 2015 I மெய்யருள் வியப்பு – ஆறாம் திருமறை தனக்கு நிகரில்லாது உயர்ந்த தம்பம் ஒன்றதே தாவிப் போக போக நூலின் தரத்தில் நின்றதே இங்கோர் மலையின் நடுவில் உயர்ந்த தம்பம் நணுகவே ஏறிப் போக போக நூலின் இழைப் போல் நுணுகவே தம்பம் = சுழிமுனை நாடி இந்த நாடியானது மேலேப் போகப் போக சிறுத்துப் போகும் தன்மையுடையது – இதனால் தான், இந்த நாடியின் குணத்தினால் தான், வள்ளலார், உரை நடையில் , ஞானயோக அனுபவத்தில் செல்வோருக்கு காட்சிகள் அறுகித் தோன்றும் என்று கூறுகிறார். II வள்ளலார் செய்த சாதனம் என்ன ?? இதனை அனுமானிக்க முடியாமல் இன்னமும் சன்மார்க்கிகள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் வள்ளலார் என்ன சாதனைகள் / பயிற்சிகள் செய்தார் என்று வினவினால் – எல்லா சன்மார்க்கத்தவரும், அவரின் சாதனை – ஜீவகாருண்யம்/ கருணை ஒன்று தான் என்று விளம்புவர். கருணை = சோறு போடுதல் என்ற அர்த்தத்திலேயே விளக்கம் அளிப்பர். சோறு மட்டும் போட்டுவிட்டு , இந்தப் பெரிய நிலையை அடைய முடியுமா , முத்தேக சித்தியை அடைய முடியுமா ?? என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே வினவ வேண்டும் சுத்த சன்மார்க்க சாதனம் – வள்ளலார் தான் செய்த சாதனம் – உலகிற்கு தெரியாமல் மறைத்து விட்டார். ஆங்காங்கே சங்கேத வார்த்தைகளாய் – “திருவடி” என்று அதை தெரியப்படுத்தினாலும் – அதை முழுமையாக புறங்கவிய வெளிப்படுத்தவில்லை இது பெரும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றது அவரவர்க்கு சன்மார்க்கம் விளங்கும் காலத்தின் போது , அவரவர்க்கு தெரிவிக்கப்படும். வள்ளலார் பற்றி நின்றது : திருவடி 2, கண்கள் ( கண்களில் திருவடி உள்ளது ) இவ்விரண்டும் அவரை ஏறா மிசைக்கு கூட்டிச் சென்றது என்பது உலகறிந்த உண்மை வள்ளலார் சாதனம் : அவர் தன் சாதனத்தில் ” திருவடி ” பயன்படுத்தினார் – கண்களைப் பயன்படுத்தினார் – கண்களில் உள்ள ” திருவடி ” பயன்படுத்தினார் . அதனால் இந்திரிய மற்றும் கரண ஒழுக்கம் வேகமாக கைகூடி அவர் மரணமில்லாப் பெருவாழ்வு மற்றும் ஞான சித்தி மற்றும் முத்தேகச் சித்தி அடைந்தார். அதனால் தான் திருவடி திருவடி என்று திருவடிப் புகழ்ச்சி 2 திருவடிப் பெருமை என்று நிறைய பாக்கள் பாடி அதற்குப் பெருமையையும் தன் நன்றியையும் தெரிவிக்கின்றார். அவர் தன் சாதனத்தில் உயிராகிய ” விந்துவை ” பக்குவப்படுத்தி பயன்படுத்தினார் – ” பரவிந்துவாக மாற்றினார் ” – இந்த அனுபவத்தையே ” நல்ல மருந்து ” என்றும் ” ஞான மருந்து ” என்றும் பாக்களாகப் பாடியுள்ளார். அந்த மருந்தின் வல்லபத்தை எல்லாம் பட்டியலிட்டு , தனக்கு என்னவெல்லாம் கொடுத்தது என்பதுவும் கூறுகின்றார். வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.