Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 12, 2026
எனது திருவடி தவ அனுபவம்
எனது அனுபவங்கள் :
நான் காஞ்சீபுரத்தில் L& T இல் பணியாற்றிக் கொண்டிருந்த போது , 1996 இல் சன்மார்க்க தீக்ஷைப் பெற்றேன். அன்றிலிருந்து தொடர்ந்து சாதனம் பயின்று வருகின்றேன். அதன் பெயர் � ” சக்ஷு – கண் – நயன தீக்ஷை � ” ஆகும்
நடுவில் சில காலம் பணி நிமித்தமாக இடைவெளி விட நேர்ந்தது
சாதனையில் நல்ல அனுபவங்களும் கிடைத்துள்ளன – கிடைத்து வருகின்றன
பெற்றுள்ள அனுபவங்கள் :
1. மூச்சு அடங்கி இருக்கின்றது = மூச்சு அளவு குறைந்து போகின்றது
2. இரண்டு முறை – � கள்� உண்டது போல் போதையாக இருந்தது
3. உடம்பில் பலவித வாசனைகள் அடிக்கும் – அது சில சமயம் 3 வாரம் இருக்கும் – சில சமயம் 3 மாதம் வரையில் இருந்து , பின்னர் போய்விடும்
தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதில்லை
4. தினமும் அரை மணி உடல் முழுதும் ” சில்லென்று ” இருக்கும்.
சாதனையால் , உஷ்ணத்தின் அதீதத்தால், உடல் சில்லென்று இருக்கிறது – அது குறிப்பாக முதுகில் அவ்வாறு இருக்கிறது
மேலும் இந்தம் அதீத உஷ்ணமானது உடலின் எல்லா உறுப்புகளையும் சுத்தம் செய்து விடுகிறது
5. பல மகான்கள், ஞானியர்களின் தரிசனம், சாதனம் செய்யும் போது கிடைத்திருக்கின்றது – அவர்கள் பேசுவது கேட்பதில்லை – ஆனால் உதட்டசைவு மட்டும் கண்ணுக்கு தெரியும் – சாதனையில் இன்னும் குறை இருக்கின்றது
நான் பெற்ற ஞானியர்களின் தரிசனங்கள் :
1. சிவம் + உமாதேவியார்
2. திரு ஞான சம்பந்தர்
3. மாணிக்க வாசகர்
4. வள்ளலார் ( பேசுவது கேட்பதில்லை )
5. வாலை ( பேசுவது கேட்பதில்லை )
6. ஸ்ரீ ராகவேந்திரர்
7. சாய் பாபா ( ஷீரடி )
8. அகத்தியர்
9. ஸ்ரீ ராமர்
10 ஸ்ரீ கிருஷ்ணர்
11 ஆதி சங்கரர்
12 அவ்வையார்
13 Jesus Christ ( பேசுவது கேட்பதில்லை )
14 லட்சுமி தாயார்
15 முருகன்
16 இமயமலை பாபா
17 பட்டினத்தார் – தன் கைக்கரும்பை என்னிடம் கொடுக்க , நான் அதனை உண்ண , என்னுடல் உடல் சொர்ண தேகமாக மாறிவிடுறது
இந்த மகான்கள் என் வாழ்க்கையில் – சாதனையில் – பல்வேறு கட்டங்களில் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளனர். நான் பெரும் பயன் – நன்மை – முன்னேற்றம் -அடைந்துள்ளேன்.
6 திருவடிகளின் இணைப்பினால் , நடு நெற்றியில் நீல ஒளி தோன்றல்
7. நான் பல தீய /பாவ கரும பலன்களை அனுபவிக்காமலேயே , அதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருகிறது.
நான் சாதனம் – தவம் செய்யும் போது அது கண்ணுக்குத் தெரியும்.
அது எப்படி தெரிவிப்பர் என்றால் , எனது கணக்கு புத்தக்கதிலிருந்து , பல பக்கங்களைக் கிழித்து விடுவார்கள் – எனது முதுகிலிருந்து சுமை இறக்கி விடுவார் – இது போன்ற காட்சிகளால் தெரிவிப்பர்
இதெல்லாம் எப்படி சாத்தியம் ஆகிறதென்றால் – நான் சாதனத்தில் ” திருவடியையும் விந்துவையும் ” பயன்படுத்துவதால்- விந்து சத்தி எல்லா கருமங்களை நாசம் செய்ய வல்லது – வள்ளலார் இதையே நல்ல மருந்து – ஞான மருந்து என்றும் விளிக்கின்றார்.
எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு பயிற்சி செய்வர் (பெரும்பாலான சன்மார்க்கிகள் எந்த சாதனம் செய்யாமல் – சோறு போடுவதோடு சரி என்ற நிலையில் இருக்கின்றார்கள் ). ஆனால் நான் கண்ணைத் திறந்து கொண்டு தான் தவம் ஆற்றுகின்றேன்
அதனால் தான் இவ்வளவு வளர்ச்சி கண்டுள்ளேன் என்று நம்புகின்றேன்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.