Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 9, 2026
அரும்பெருஞ்ஜோதியும் அருட்பெருஞ்ஜோதியும் “
அரும்பெருஞ்ஜோதியும் அருட்பெருஞ்ஜோதியும் “
அரும்பெருஞ்ஜோதி எனில்
அது ஆன்ம ஒளி குறிப்பது ஆம்
சுழி திறந்தால் கிட்டும் அனுபவம்
அருட்பெருஞ்ஜோதி எனில்
அது ஆன்ம ஒளிக்கே ஒளி அளிக்கும் தயவுடை ஒளி
அது சிற்றம்பலத்தே விளங்கு ஒளி ஆகும்
பிரமாணம் :
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
பத்தாம் வாசல் பெருமை
சோதியே பெருஞ்சோதி சொல்லொண்ணாது
சுழிவாசல் தான்திறந்தார் காண்பார்பூண்பார்
ஆதியோ யிவ்வாசல் நுழையக்காணார்
ஆர்காண்பார் மெய்ஞ்ஞானம் அரிது சத்தே
வீதியோ மேல்வாசல் கெதியாம் வாசல்
மெய்ஞ்ஞான வீட்தனிற் குள்ளே சென்றால்
தீதியோ துன்பமில்லை கண்ணாம் வீட்டில்
செந்தணலைகண்டிலாம் தெருவில் தானே
பொருள் :
வாயால் உரைக்கவொண்ணாத ஜோதியாம் ஆன்ம ஜோதியை – சுழிமுனை திறந்தார் தான் காண்பார் – அதை அனுபவிப்பார்
இதை காண்பது மிகவும் அரிதாம்
அதிருப்பது மேல் வாசல் ஆகிய 10 ஆம் வாசல்
அது மெய் ஞான வீடு ஆகும்
அதை திறந்து உளே சென்றுவிட்டால் – ஒரு துன்பமும் தீதுமிலை
அப்போது தெருவாம் சுழிமுனை நாடி ஜோதி மயமாய் விளங்கும்
செவ்வொளியாம் ஆன்ம ஜோதியைக் காணலாம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.