Thursday, March 5, 2026

சன்மார்க்க மாநாடு

சன்மார்க்க மாநாடு சற்றே பெரிய பதிவு - பொறுமை தேவை வடலூர் சன்மார்க்க மாநாடு நடத்துபவர் : 1 சுத்த சிவ சன்மார்க்க ஞானிகள் 2 Mr Charles , CEO , School of Mutants - the Gifted children of the Universe, USA His Aides 1 LOGAN 2 Jean 3 Magneto and other all class mutants மாநாட்டில் பங்கேற்போர் : த நாட்டில் உள்ள எல்லா சன்மார்க்க சங்கங்கள் - அரசியல் கட்சித் தலைவர்கள் - உட்பட தொடக்க உரை : சன்மார்க்கம் - அதன் உண்மைத் தன்மை பற்றி உலகறிய நேரம் வந்துவிட்டது என்றார் ஒரு ஞானி அதுக்கும் விஞ்ஞானத்துக்கும் இருக்கும் தொடர்பு தெரியப்படுத்த திரு சார்ல்ச் அழைத்து வந்திருக்கிறோம் என்றார் முத்தேக சித்திக்கு - சுத்த உஷ்ணம் வேண்டும் என்பார் வள்ளல் பெருமான் - இதை விஞ்ஞானம் - அணு உலையில் இருக்கும் அளவுக்கு வெப்பம் - அதுவும் தொடர் வெப்பம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்கிறது - இதை வைத்து சாதனையும் செய்து காட்டி வருகிறது - இந்த தொடர் வெப்பத்தால் நம் ரத்தத்தில் இருக்கும் ஜீங்கள் - குரோமோ சோம்கள் - DNA - மாற்றம் அடைந்து அது நமக்கு எல்லாம் வல்ல சித்தி கொடுக்குது என்பது உண்மை ஆம் என்று தலை அசைத்து ஆமோதித்தார் சார்லச் அறிவியல் ஆய்வு இன்னமும் தொ்டர்ந்து வண்ணம் உள பின்னர் மேட்டருக்கு வருவோம் என்று எப்படி தவம் செய்வது - எவ்வளவு நேரம் செய வேண்டும் என்று ஒருவர் உரைத்தார் ஒரு சாதகன் மரணமிலாப்பெரு வாழ்வு - முத்தி - சித்தி அடைய விரும்பினால் குறைந்தது 10 - 12 மணி நேரம் சாதனை - சரியான சாதனை செய வேண்டுமென்றுரைத்தார் நல்ல ஆய்வு செய்யும் திறன் - கல்வி இருத்தல் அவசியம் என்றார் கூட ஜீவ காருண்ணீயம் - ஒழுக்கங்கள் வேண்டும் - முக்கியமாக கண் கட்டுப்பாடு என்றார் அதைக்கேட்டு செல்வி மாயாவதி - விசிக பிரமுகர்கள் இதெல்லாம் எங்கள் மக்களால் முடியாது இது எங்கள் மக்களுக்கு எதிரானது - இது நாங்கள் அடையக்கூடாது என்பதுக்காக சொல்லப்பட்டுளது என்று கத்தினர் எங்களுக்கு இதில் சலுகைகள் வேண்டும் என்றனர் பதில் : உழைப்பு - இது ஒன்று தான் இங்கு செல்லுபடி ஆகும் மற்றெலாம் ஆகா என்றது பதில் யோகி ஆதித்ய நாத் சிரித்துக்கொண்டார் அரசியல் கட்சிகள் வெளியேறலாம் என்று ஒலித்தது மீறினால் - அவமானம் தான் மிஞ்சும் அவர்கள் தொடர்ந்து உள்ளிருக்கவே - அவர்கள் இருக்கைகள் மாயமாகின - அவர்கள் தரையில் உருண்டு விழுந்தார்கள் பின்னும் இருந்தால் என்ற எச்சரிக்கை பின் " Charles - its yr turn - they are all Yours " என்று குரல் சார்லச் தன் மாணாக்கர்களை நோக்கினார் எதிர்த்தவர்கள் எல்லாரும் அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் - நொடிப்போதில் - யாரும் காணா வண்ணம் பதில் - இந்த மார்க்கம் அரசுப்பணி மாதிரி அல்ல - உழைக்காமல் ஊதியம் பெற - உழைப்புக்கு தகுந்த பலன் தான் கிட்டும் பின் ஒரு தெளிவு கொடுத்தனர் யார் யார் எல்லாம் சன்மார்க்கம் என்றால் வெறும் அன்னதானம் - ஜீவகாருண்ணியம் என்று தவறாக பொருள் கொண்டுளோர் வெளியேறலாம் என்று ஒலித்தது இதில் சாதனம் -தவம் தியானம் இல்லை என்று தவறாக பொருள் கொண்டுளோர் வெளியேறலாம் என்று ஒலித்தது மக்கள் இப்படி அப்படி பார்த்தனர் செய்வதறியாது திகைத்தனர் பின் எல்லா சன்மார்க்க சங்கங்கள் - தி மலை சாது குழு - மூ பா - Vallalarspace.com செந்தில் - எல்லாரும் வெளியேறினர் பின் குரல் : குண்டலினி யோகம் செய்பவர்கள் அதுவும் அது முதுகுத் தண்டின் அடியில் என்று தப்பாகச் செய்பவர்கள் - கழுத்துக்குக் கீழ் சாதனம் செய்பவர்கள் வெளியேறலாம் என்றது வேதாத்ரி - அவர் தம் தொண்டர்களுடன் வெளியேறினார் பின் - சன்மார்க்க சாதனம் என்றால் - அது பரோபகாரம் சத்விசாரம் என்று மட்டும் கூறிவிட்டு - தவம் இல்லை என்று சொல்பவர்கள் வெளியேறலாம் என்றது அமெரிக்கா வாழ் தமிழர் - துரை சாதனன் தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார் மேலும் - யார் எல்லாம் சமய மதங்கள் எல்லாம் இறுதி நிலைக்கு தான் செல்லும் - வழி காட்டும் என்போரும் வெளியேறலாம் என்றது பின் இறுதியாக - இது வடி கட்டும் பணி ஆகும் என்றது குரல் - இது நிறைவுற்றது எஞ்சி இருந்தது - காஞ்சி சன்மார்க்க அன்பர்களும் - உலகக் குரு செல்வராஜ் - அவர் தம் சீடர்களும் தான் குரல் : " சன்மார்க்க சாதனம் கண் சம்பந்தப்பட்டது " என்றது இந்த இரு குழு தான் ஏறக்குறைய சரியாக சாதனம் செய்கிறார்கள் என்பதால் - இவர்களுக்கு இன்னமும் இதன் நுணுக்கங்கள் - பயிற்சி - ஒ்ளி நெறிப்பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தனர் இதில் செல்வராஜ் அன்பர்களுக்கு - " நீங்கள் திருவடி கண்டு செய வேண்டும் என்றும் - தூண்டுதல் ஆகாதென்றும் " சொல்லப்பட்டது பின் னெற்றிக்கண் திறப்புக்கு குறிப்பு - 8/2 - விளக்கம் கொடுக்கப்பட்டு பயிற்சி நிறைவுற்றது இது சன்மார்க்கம் உருப்படுவதுக்கு எடுக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு முயற்சியே என்று குரல் ஒலித்தது சன்மார்க்கம் தருமச் சாலையில் இருந்து - ஞான சபைக்கும் - சித்தி வளாகத்துக்கும் பயணம் தொடங்கிற்று என்றே கொள்ளலாம் சன்மார்க்கம் அன்ன தானத்தில் இருந்து - தவத்துக்கு தன் பயணம் தொடங்கிற்று என்றே கொள்ளலாம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.