Wednesday, March 4, 2026

63 நாயன்மார் – நீலகண்டர் – சன்மார்க்க/ தத்துவ விளக்கம் “

63 நாயன்மார் – நீலகண்டர் – சன்மார்க்க/ தத்துவ விளக்கம் “ இந்த பாடல் மிக்க புகழ் பெற்றது விளக்கம் யாதெனில் : “ நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது “ இது கவியின் சினிமா பாடல் நம் நயனம் கண் நீல நிறம் கண்டம் = இரு துண்டு , கழுத்து அல்ல இரு துண்டு ஆக இருக்கும் கண் தான் நீல கண்டம் – அதில் உறைபவன் - உறையும் ஓளி தான் நீல கண்டன் உலகம் : கருத்த நிறம் ஒத்த கழுத்து உடைய சிவம் என பொருள் அளிக்குது அது தவறு அப்போது நீலகண்ட நாயனார் என்பது கண் – திருவடி உருவகம் என ஆகுது நான் ஆய்ந்து பார்த்ததில் எனக்கு 5 நாயன்மார் விளக்கம் தான் கண்டு பிடிக்க முடிந்தது 1 தி ஞான சம்பந்தர் – திருவடி – வேகாக்கால் அனுபவம் 2 மாணிக்க வாசகர் - கண்மணி - ஜீவ ஒளி 3 சுந்தரர் – பிரணவம் – அழகு 4 திருமூலர் – மூலத்தில் , தவத்தால் உருவாகும் அக்கினி – மூலாக்கினி 5 மெய்ப்பொருள் நாயனார் – கண்மணியில் விளங்கும் மெய்ப்பொருள் 6 கண்ணப்ப நாயனார் – கண்மணி ஜீவ ஒளி / திருவடி 7 நீல கண்டர் – திருவடி கண்மணி உருவகம் இதுக்கு மேல் கண்டுபிடிக்க முடியவிலை வெங்கடேஷ் பி கு நாங்கள் சன்மார்க்க சாதனமாகிய ” பரோபகாரம் – சத்விசாரம் ” செய்கின்றோம் என்று நெஞ்சை நிமிர்த்தும் சன்மார்க்கத்தவர்க்கு : சாதனம் - தவம் செயவே தேவையிலை - சத்விசாரம் போதும் என வாய் கூசாமல் பொய் உரைக்கின்றார் இதுக்கு உரை நடை பிரமாணம் காட்டுவர் நீங்கள் உண்மையிலே சத்விசாரம் செய்து வந்தால் – ” உரை நடையில் வள்ளல் கூறிய 63 நாயன்மார்கள் யாவும் தத்துவ விளக்கங்கள் தான் ” என்பதுக்கு விளக்கம் கொடுங்கள் – பார்ப்போம் 63 வரும் வேண்டாம் ஒரு 5 பேரின் தத்துவ விளக்கங்கள் கொடுக்கவும் இந்த பதிவை vallalarspace,com ல் 2015 ஆண்டு கேட்டேன் யாரும் பதில் போடவில்லை ஒருவர் கூட பதில் அளிக்கவிலை ஒருவர் ( அமெரிக்கா ) மட்டும் மாணிக்க வாசகர் ஆகாய தத்துவம் என தவறாக பதில் அளித்தார் இங்கே ஒரு சாது மாணிக்க வாசகர் – நாத தத்துவம் என தவறாக பதில் அளித்தார் எனக்குத் தெரியும் இவர்க்கு இதுக்கு பதில் தெரியாது – ஏனெனில் சத்விசாரம் என்பதே செய்வதிலை ஆனால் வெளியில் நாங்கள் வள்ளல் பெருமான் சொன்னது மாதிரி இதெல்லாம் செய்கின்றோம் என்று சொல்வது இவர்கள் 1 அ பெ ஜோதி அ பெ ஜோதி தனிப்பெருங்கருணை அ பெ ஜோதி 2 வள்ளல் மலரடி வாழ்க 3 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று ஒவ்வொரு பதிவுக்கு பதில் அளிப்பார்கள் தர்மச்சாலை போதும் – சத்திய ஞான சபை வேண்டாம் கேட்டால் , வள்ளல் சொன்னதை - " நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் " - என்பதை சொல்வார்கள் அதனால் நீங்கள் இதுக்கு தலை உடைத்துக்கொள்கிறீர்கள் என திருப்புவர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.