Tuesday, March 3, 2026

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை - 67

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை - 67 இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம் இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார் மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார் மகனேநீ நூல்அனைத்தும் சாலம்என அறிக செயல்அனைத்தும் அருள்ஒளியால் காண்கஎன எனக்கே திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. பொருள் : வள்ளல் வேதங்கள் ஆகமங்கள் இதிகாசங்கள் புராணங்கள் யாவும் மாயா சாலம் தான் மயக்கம் தரும் - தெளிவு தரா நூல்கள் தான் இவை அதனால் எல்லாவற்றையும் அனுபவ பூரவமாக - அருள் ஒளியால் உண்மை காண்க - தெளிக - அறிக என உயிர்க்கு உண்மை உரைத்த குருவே ஆசிரியனே அறிவுடை ஞானிகள் போற்ற ஆடல் செய் அரசெ என் சொல்மாலை அணிந்து அருள் செய்கவே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.