Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 67
அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 67
எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே
என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே
செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ
திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே
அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி
அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே
ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும்
ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந்தருளே
பொருள் :
எல்லா இடத்துக்கும் உயிர்க்கும் தெய்வம் ஒன்றே - அது சிவம் - சுத்த சிவம் - அபெஜோதி
அது அருளுடன் விளங்கும் காலத்தில் ரெண்டாக ஆகும் காண்
இது உண்மை - நீ திகைப்படைய வேண்டாம் என எனக்கு உண்மை உரைத்த சத்குருவே - உண்மை ஆசிரியனே
எல்லா இடத்தும் - இங்கும் அங்கும் எங்கும் - அப்பாலும் - அப்பாலுக்கு அப்பாலும் விளங்கும் பொருளே - பொன்னம்பலத்தும் சிற்றம்பலத்தும் விளங்கியும் வருது - அங்கு ஓங்கி நடம் செயும் ஆடல் அரசே என் மாலை அணிந்து அருள் செய்கவே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.