Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 4
ஒளி தேகம் – சாகா தேகம் பெற்ற இந்திய/ தமிழ் நாட்டு ஞானிகள் – பாகம் 4
இவர்கள் அனைவரும் தங்கள் தேகத்துடன் வெளியில் - சிற்றம்பல வெளியில் -ஒளியில் கலந்தவர்கள் – சமாதியோ , மரணமோ அடையவிலை என்பது குறிப்பிடத்தக்கது
1 திரு ஞான சம்பந்தர்
2 சுந்தரர்
3 அவ்வையார்
4 சேரமான் பெருமான் நாயனார்
5 ஆண்டாள்
6 பத்திரகிரியார்
7 மீரா பாய்
8 வள்ளல் பெருமான்
9 மாணிக்க வாசகர் பெருமான்
10 அப்பர் பெருமான்
11 திருமூலர் பெருமான்
12 சிவவாக்கியர்
இதில் யோசிக்க வேண்டியது என்னவெனில் – ஏன் நம் சமகால குருமார்கள் இடம் பெறவிலை என்பது தான்
பின் அவர்கள் தம் சாதனாமுறைகளில் ஏதோ தவறு இருக்கு என தானே பொருள் கொள்ள வேண்டி யிருக்கு??
அவர்களும் ஒரு அனுபவத்துக்கு வந்தவர்கள் தான் எனினும் , அவர்கள் அந்த பாதையில்முழுமை அடையவிலை என்பது உண்மை
இன்னமும் நடந்து சென்று அனுபவத்துக்கு வர வேண்டியது நிறைய உள என்பது உண்மை
இது என்ன செய்தி அறைந்து சொல்ல வருதென்றால் " ஸமாதி , மரணமிலாப் பெருவாழ்வு என்பதெல்லாம் ஒரு பிறவியில் ஆற்றக்கூடியதல்ல - பல பிறவி தொடர் முயற்சியினால் தான் கைகூடும் " என்பது தான்
அதனால் அவர்கள் இன்னமும் கடக்க வேண்டிய படிகள் அனேகம் உள என்பது தான் உண்மை
அதனால் விட்ட குறை தொட்ட குறை என்று கூறி உள்ளனர் நம் முன்னோர் - அவர்கள் அறிவாளிகள்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.