Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 19, 2026
காந்தாரியும் காயகல்பமும் 2
காந்தாரியும் காயகல்பமும் 2
காந்தாரி தன் புருஷன் திருதராஷ்டிரன் குருடன் என்பதை அறிந்து , தானும் அந்த இன்பத்தை – உலகத்தை காணக்கூடாது என்பதற்காக , கண்ணைக் கட்டிக்கொண்டாள் நாம் அனைவரும் அறிந்ததே
ஆனால் நாம் அறியாததை இப்போது படிக்க போகின்றோம் – அந்த நிகழ்வானது எப்படி தவமாக மாறியது என்பதைப் பார்க்கப் போகின்றோம்
பாரதக்கதையில், கௌரவர்கள் 100இல்,99 சகோதரர்களும் மாண்டுவிட,துரியோதனன் மட்டுமே எஞ்சி உள்ளான். தாயும் மகனும் மீளா சோகத்தில் உள்ளனர்.
அப்பொழுது அவளுக்கு ஒரு யோசனை தோன்றுகின்றது – அவனை காப்பாற்றுவதற்காக, இரவில், பிறந்த மேனியாக ( உடம்பில் துணியில்லாமல் ) வரச் சொல்கின்றாள். அவனும் சரி என்கிறான்.
கண்ணன் இதை அறிந்து , துரியோதனன் கங்கையில் குளித்து விட்டு , தாயைப் பார்க்கச் செல்லும் போது , இடை மறித்து, ஒரு சூது செய்து . அவனை , தொடையை மட்டும் துணியால் மறைத்துச் செல்லும்படி செய்து விடுகின்றான்.
துரியோதனனும் தாயின் முன்னால் சென்று நிற்கின்றான், காந்தாரியும் , தன் கண்கட்டை அவிழ்த்து, அவன் உடல் முழுமையும் தன் கண்ணால் நோக்குகின்றாள். அதிர்ச்சி அடைகின்றாள்.
வரும் வழியில் கண்ணனை பார்த்தாயா என்று கேட்கின்றாள் ?? – ஆமாம் என்கிறான்.
மோசம் போனாயே என்கின்றாள்.
காந்தாரியின் பார்வையால் அவன் உடல் முழுதும் வஜ்ஜிர தேகம் ஆகிவிடுகின்றது – தொடை பகுதியை தவிர .அவன் உடல் கல்பம் ஆகிவிட்டது.
எப்படி என்று நீங்கள் ஆச்சரியத்தில் வினவலாம்??
அதில் தான் இரகசியம் இருக்கின்றது .
காந்தாரி தான் உலகத்தை பார்க்காமல் சேமித்து வைத்திருந்த கண்ணின் சத்தியை , பார்வையின் சத்தியை ( அது தவமாக மாறிவிட்டது ) அவன் உடல் முழுதும் செலுத்தி , அதன் மூலம் அந்த உடம்பை கல்பம் செய்து விட்டாள்.
இப்போது துரியோதனன் உடல் யாராலும் அழிக்க முடியாது ஆனால் தொடையில் அடித்தால் மட்டும் உடல் வீழ்ந்து விடும் – இது கண்ணனின் சூழ்ச்சியால் நடந்தது
மேலே கூறப்பட்ட அந்த இரகசியம் இது தான் : உடலை கல்பம் செய்யும் வல்லமை – கண்ணிற்கு இருக்கின்றது – பார்வைக்கு இருக்கின்றது –
அதனால் தான் வள்ளலார் – கண்ணே – மணியே – கண்ணின்மணியே – என்றெல்லாம் பாடுகின்றார்.
இந்த இரகசியம் தெரிந்து கொண்ட பிறகு, ஆறாம் திரு முறை மீண்டும் மீண்டும் ஓதி வர , சன்மார்க்க சாதனை என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக விளங்கும்
என் கேள்வி :
சரி இதில் எங்காவது காந்தாரி மன வளக்கலை பயிற்சி அஸ்வினி முத்திரை செய்து காயகல்பம் செய்தாள் என வருகிறதா ??
அவள் எந்த யோகம் செய்தாள் ?? என குறிப்பு வருதா??
பின் அவளால் எப்படி இந்த அரிய சாதனை செய்ய முடிந்தது ??
யோசிக்கவும்
ஆகையால் உலகை நம்பி மோசம் போகக்கூடாது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.