Monday, March 2, 2026

திருமந்திரம் ஏழாம் தந்திரம் அருள் ஒளி 1820

திருமந்திரம் ஏழாம் தந்திரம் அருள் ஒளி 1820 திருவடி பெருமை புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி நிறமே புகுந்தென்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்தெனக்கு ஆரமுது ஈந்த திறம்ஏதென்று எண்ணித் திகைத்திருந் தேனே விளக்கம் : பொறிபுலன் வழி புறத்தே அலைந்திருந்தேனை – என்னை – தன் திருவடிகள் காட்டி , எனக்குள் புகுந்து , என்னை சுத்தன் புனிதன் ஆக்கி , ஆன்ம வழியில் நிற்கச் செய்து அதை அடையும் வழியில் நிற்க செய்து , அமுதம் அளித்தது எண்ணி நான் திகைத்திருக்கின்றேனே திருவடிகள் மனதை உலக வழியில் இருந்து திசை மடை மாற்றி விடும் வல்லமை உடைத்து சிவம் மாணிக்க வாசகரை திருவடி சென்னியில் சூட்டி திருப்பெருந்துறையில் ஆட்கொண்டது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது திருவடி எனில் இறை கழல்கள் – அதுவும் இறை போல் ஒளியே ஆம் திருக்குறள் விளக்கம் அளிக்கும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.