Saturday, March 14, 2026

மாணிக்க வாசகர் திருவாசகம் – திருவண்டப்பகுதி

மாணிக்க வாசகர் திருவாசகம் – திருவண்டப்பகுதி ஒளி தேகம் - பயிற்சி / விளக்கம் - ஆதாரம் அருளியது அறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து உவாக்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170 தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புதம் ஆன அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 உள்ளம் கொண்டோர் உருச்செய் தாங்கு எனக்கு அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில் கருணை வான்தேன் கலக்க 180 அருளொடு பரா அமுது ஆக்கினன் பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே. 1 விளக்கம் : இந்த பாடல் வரிகளில் மாணிக்க வாசகர் தன் அருளமுத அனுபவம் பத்தி குறிப்பிட்டு பாடுகிறார் மேலும் இதில் ஒளி தேகத்துக்கான பயிற்சி / விளக்கம் அளிக்கிறார் இந்த வரிகளில் தான் ஒளி தேகம் பெற்றுவிட்டதையும் அதன் பயனால் என்றென்றும் வாழும் , மரணமிலாப்பெருவாழ்வு அடைந்துவிட்டதையும் உறுதி படுத்துகிறார் யார் ஒத்துக் கொள்கிறார்?? ஆனால் மக்கள் இந்த அரிய நூலை பெரும் பொக்கிஷத்தை சமய மத சாயம் பூசி ஒதுக்கி வைத்துள்ளார் ஆனால் வள்ளல் பெருமான் , உரை நடையில் : “இம்மார்க்கத்து உண்மை விளங்க வேணுமெனில் ?? திருமந்திரத்தையும் திருவாசகத்தையும் உற்று நோக்கவும்” என அருளியிருக்கார் யார் கடைபிடிக்கிறார் ?? உரை நடையில் இருக்கும் ஜீவகாருண்யம் கடைபிடிக்கும் மக்கள் , ஏன் இந்த வரியை நினைவில் கொள்வதிலை ?? ஏன் இந்த நூலை படிப்பதிலை ?? முதல் 5 திருமுறையே படிக்க மாட்டோம் ?? இந்த சமய நூலையா ஓதுவோம் ?? என் செய்வது ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.