Saturday, March 7, 2026

அகத்தியர் அடுக்கு நிலை போதம் 1 - 5

அகத்தியர் அடுக்கு நிலை போதம் 1 - 5 சற்குருவும் சன்னிதியும் ஆனது தான் எங்கே ?? சாகாத கால் எங்கே ?? வேகாத் தலையும் எங்கே ?? முப்பொருளும் ஒரு பொருளாய் நின்றது எங்கே ? முனை எங்கே ? தலை எங்கே ? முகமும் எங்கே?? நற்கமலமாம் ஆயிரத்தெட்டு இதழும் எங்கே ? நாலுகை ஒரு பாதம் ஆனது எங்கே?? இப்பொருளை அறிந்த பெரியோர் தமை இறைவன் என்றே கருதி இயம்பலாமே விளக்கம் : சற்குருவும் சன்னிதியும் : ஆன்மா தான் சற்குரு அதன் இருப்பிடமாம் துவாதசாந்தப்பெருவெளி தான் சன்னிதி சாகாத கால் எங்கே ?? வேகாத் தலை பொதுவாக சாகாத்தலை வேகாக்கால் தான் இருக்கு சித்தர் பாஷையில் இங்கே மாறி இருக்கு எனினும் அவைகள் சாகாக்கல்வி தெரிவிக்கும் சூக்குமங்கள் ஆகும் முப்பொருளும் ஒரு பொருளாய் நின்றது - உச்சியில் பதி பசு பாசம் சிவமாக பதி பசுவாக ஆன்மா/ஜீவன் பாசமாக மும்மலம் முனை - சுழி உச்சி தான் முனை தலை முகம் - அதுவும் உச்சியே நற்கமலமாம் ஆயிரத்தெட்டு இதழ் : ஆன்ம நிலையமாம் 1008இதழ் கமலம் சிரசில் நாலுகை ஒரு பாதம் : ஒரு பாதம் சுழி நாடியில் நாதவிந்து கலவை ஆகிய ஏகபாதம் இப்பொருளை அறிந்த பெரியோர் தமை இறைவன் என்றே கருதி இயம்பலாமே இப்பொருள் உரைப்பார் குரு ஆவார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.