Sunday, May 3, 2026

திருவருட்பா – ஆறாம் திருமுறை

திருவருட்பா – ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை சுத்த சன்மார்க்கத்தின் மரபு சாகாத கல்வியே கல்வி – ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் வேகாதகி கால் கண்டுகொண்டு எப்பொருளும் விளையவித்த தொழிலே மெய்த்தொழில தாகும் – இன்னாங்கையும் ஒருங்கே வியந்தடைந்து உலகமெல்லாம் மாகாதலுற எல்லாம் வல்ல சித்தாகி நிறை வானவரமே இன்பமாம் மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபென்று உரைத்த குருவே தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்தெனைத் தேற்றி அருள் செய்த சிவமே சிற்சபையின் நடுனின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராஜ பதியே ( பாடல் – 62 ) இந்தப் பாடலில் 1 சாகாதிருக்க கற்கும் கல்வி தான் உண்மையான கல்வி 2. தான் சிவம் என்பதை அறிவது தான் உண்மையான அறிவு இதில் சிவம் என்பது மூவர் - ஐவர் இருக்கும் சதாசிவம் வரையிலும் கூட இல்லை - இதெல்லாம் தாண்டிய தனிப்பெரும் நிலை - சிற்றம்பல நிலை அங்கு நடம் புரியும் நட ராஜன் - ராஜபதி 3 மலங்களை வெல்வது தான் உண்மையான முழுமையான வல்லபம் 4 வேகாக்கால் கைவரப்பெற்று அதன் மூலம் எந்தப் பொருளையும் விளைவிக்குக் தொழில் தான் உண்மையான தொழில் மேற்கூறிய நான்கையும் ஒருங்கே வரமாக பெற்று எல்லாம் வல்ல சித்திகள் கைவரப்பெறுவது தான் உண்மையான இன்பம் இது தான் " சுத்த சன்மார்க்கத்தின் மரபு " என்று வள்ளல் பெருமான் கூறுகின்றார் நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கும் உண்மைக்கும் எவ்வளவு தூரம் – எவ்வளவு வித்தியாசம் – வேறுபாடுகள் ?? இதெல்லாம் இப்போ கைவரப்பெற்ற குருமார் யாரும் இருப்பதாக தோன்ற வில்லை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.