Wednesday, May 6, 2026

மதுரை கள்ளழகர் – பழமுதிர் சோலை – ஆகாய கங்கை – சன்மார்க்க விளக்கம்

மதுரை கள்ளழகர் – பழமுதிர் சோலை – ஆகாய கங்கை – சன்மார்க்க விளக்கம் நான் இப்போது 2019 தான் விஜயம் செய்ய முடிந்தது இந்த ஆலயங்களுக்கு – 40 ஆண்டுக்குப்பின் என் அத்தை திருமணத்தின் போது 1980 களில் சென்ற பின் இப்போது சென்று வர முடிந்தது தூரம் அதிகம் கருதி நான் தவிர்த்து வந்தேன் – நேரமின்மையும் கூட 1 மலை மேல் பழமுதிர் சோலையில் முருகன் மலை = சுழுமுனை மலை - உச்சி முருகன் = ஆன்மா இங்குள்ள நாவல் மரத்தின் மீது அமர்ந்து தான் முருகன் – தமிழ் மூதாட்டி ஔவையுடன் திருவிளையாடல் – “ சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமா “ என செய்தது மலைப்பாதை கரடு முரடானது – இது சாதனத்தில் இருக்கும் கடினத்தை உணர்த்தும் 2 அதுக்கு மேல் நூபுர கங்கை இது ஆகாய கங்கை எனும் அமுத தாரணையை புறத்தில் காட்ட வந்த அருவி ஆகும் இந்த அருவி தீர்த்தத்தை வீட்டில் தெளிக்க வேணும் என்பர் இது அமுதத்தை நம் தேகம் முழுதும் பரவச் செய்ய வேணும் என்பதை சொல்கிறது இது சுழுமுனை உச்சிக்கு மேலிருக்கும் பாற்கடல் அமுதக்கடல் – அங்கிருந்து சொட்டும் அமுதம் 3 கள்ளழகர் இவர் மலை அடிவாரத்தில் சுந்தர ராஜப்பெருமாள் ஆக வீற்றிருக்கார் இவரும் ஆன்மாவின் புற வெளிப்பாடு தான் அதனால் தான் பரவிந்துவாகிய இவர் வைகை எனும் சுழுமுனை நாடியில் இறங்குகிறார் இப்போதைக்கு இந்த விளக்கங்கள் எல்லாம் மறைந்து போயின – எல்லாம் சடங்காக மட்டும் நிக்குது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.