Wednesday, May 6, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 7

காக புஜண்டர் ஞானம் 80 – 7 காணலாம் பிரமத்தில் நிர்ண யந்தான் காட்டுகிறேன் வாசிமுனி கருவாய்க் கேளு பூணலாம் அண்டவுச்சி தன்னில் நின்று பொறிகளையு முண்டாக்கிப் புவனந் தன்னில் தோணலாம் உயிர்ப்பயிரைப் படைத்தெந் நாளுந் தொந்தமென்னும் ஏழுவகைத் தோற்ற மாகி ஆணலாம் நாலுவகை யோனி யாகி அண்டமடா அனந்தனந்த மான வாறே. பொருள் : அதாவது – இறை அண்ட உச்சி ஆகிய சுழுமுனை உச்சியில் நின்று – ஐம்பொறிகளாகிய – மெய் வாய் கண் மூக்கு செவி – இவைகள் இயக்கும் சூக்கும ப ஞ்ச இந்திரிய சக்திகளை உண்டாக்கியும் – பல்வகை உயிர்களை உண்டாக்கி – அதில் பேதமாம் நால் வகை யோனி எழு வகை தோற்றம் உண்டாக்கியும் – அளவில்லா அண்டங்களையும் படைத்துள்ளது என இயற்கையின் செயல்பாடு பத்தி எடுத்துரைக்கின்றார் இந்த பாடலில் உலகத்தோற்றம் குறித்து உரைத்தவாறு bg venkatesh

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.