காயத்ரி மந்திரம் – ஞான விளக்கம் -2
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|
ஞான விளக்கமானது :
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர்க லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் ஒளிரும் காரண ஒளியை நான் வணங்குகிறேன்
இறை மூன்று உளுந்து பிரமாணம் உள்ள ஆகாய கங்கை ஆகிய அமுதத்தை நான் உண்ண ஆசிர்வதிக்கட்டும்
இதன் பிரமாணமாகத்தான் கோவில்களில் மூன்று முறை தீர்த்தம் நமக்கு அளிக்கப்படுது
இந்த ஞான விளக்கம் சரியானது நான் ஏன் சொல்கிறேன் எனில் ??
இந்த மந்திரம் சந்தியா வந்தனம் ஆக சூரியன் சந்திரன் ஒன்று கூடும் காலத்தில் தான் உச்சரிக்கிறார்கள் பிராமணர்கள்
சூரியன் சந்திரன் ஒன்று கூடுவது அக்னிக்கலையில்
இந்த மூன்றும் ஒன்று கலந்தால் அது அமுதத்தை உண்டாக்கும்
இந்த மந்திரமும் அமுதம் உண்ணுதல் பற்றித்தான் இறையிடம் விண்ணப்பம் வைக்கிறது – அதனால் இந்த ஞான விளக்கம் சரியானது தான் எனத்தோன்றுது
வ
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.