Sunday, May 3, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 32

காக புஜண்டர் ஞானம் 80 – 32 ஒன்றான பிரமமே வெவ்வே றாக உலகத்தி லனந்தமடா கூத்து மாச்சு; நன்றாச்சுத் தீதாச்சு நாலு மாச்சு ஞாயிறு திங்களென்ற பேருண் டாச்சு; குன்றாச்சு ஊர்வனகள் அனந்த மாச்சு; குருக்களென்றுஞ் சீடனென்றுங் குறிக ளாச்ச நன்றாச்சு நாதவிந்தும் அடங்கி நின்ற நாதனையு மொருமனமாய் நாட்டு வாயே. பொருள் : இயற்கையின் விரிவு எடுத்துரைக்கின்றார் சித்தர் ஒன்றான பிரம்மம் ஆகிய ஆன்மாவே உலகில் எல்லாமாகி பல்வேறு வஸ்துவாகி அதன் கூத்துமாச்சு அதுவே நல்லதாச்சு கெட்டதாச்சு – சூரியன் சந்திரன் ஆச்சு மலை ஆச்சு – பல்வேறு உயிரினங்கள் ஆச்சு குரு – சீடன் என்றுமாச்சு நாதம் விந்துவும் கலந்து நிற்கும் நாதனாம் ஆன்மாவை ஒரு மனதுடன் ஒருமையுடன் சிந்தை செய்வாயே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.