Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
காக புஜண்டர் ஞானம் 80 – 15
காக புஜண்டர் ஞானம் 80 – 15
முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சத்தியடா மனந்தானே யேக மாகத் தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற் பூலோக மெல்லாந்தான் பணியு முன்னை;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம் ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே.
பொருள் :
மந்திரத்தை நினைக்கும் போது மனம் இருமை என்னுன் நிலை எய்தும்
அதனால் ஒருமை கிட்டா
அதனால் மனதை சாதனா தந்திரத்தால் , தத்துவத்தில் இருந்து பிரித்து தனியாக இருக்க வைத்து – ஆன்மாவில் கலக்க வைத்தால் இந்த உலகம் உன்னை வணங்கும்
சிரசுக்கு ஏறுகின்ற வாசி கற்ப தன்மை உடைத்து
அதாவது பௌதீக சுவாசம் நின்று உள் சுவாசம் உண்டாகி , அது நாடி வழியாக சிரசுக்கு ஏறினால் அவன் கற்ப நிலை அடைந்ததாக பொருள்
சுழுமுனை உச்சிக்கு வழி – எப்படி ?? எது எல்லாம் மேலேறும் ??
எப்படி ஏற்றுவது என ஆசான் கற்றுக்கொடுப்பார்
அவன் நீண்ட நாள் வாழும் தேகம் அடைவான் என்பதுறுதி
வெங்கடேஷ்
Seen by 2
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.