Wednesday, May 6, 2026

காக புஜண்டர் ஞானம் 80 – 16

காக புஜண்டர் ஞானம் 80 – 16 தானென்ற கற்பமடா மதுவுண் டக்கால் சஞ்சார சமாதியென்ப ததற்குப் பேரு ஊனென்ற பசிதீரும் கோபம் போகும் உதயகிரி தனிற்சென்றூ டுருவிப் பார்க்கத் தேனென்ற திரையேழுந் தீய்ந்து போகுந் திரிவாரே உச்சிநடுச் சென்ற போது கோனென்ற கருவியெல்லா மொடுங்கிப் போகுங் கூற்றுவனா ராட்டமதைப் பார்க்கலாமே. பொருள் : கற்பம் உண்ட போது உண்டாகும் அனுபவம் உரைக்கிறார் வாசி ஆகிய கற்பம் சிக்கி அது மேலேற ஆரம்பித்துவிட்டால் – அது ஒரு வகை சமாதி கைகூட வைக்கும் அது சஞ்சார சமாதி என அழைக்கப்படும் அவ்வாறு வாசி மேலேறினால் 1 பசி போகும் 2 கோபம் கிடையாது சுழுமுனை உச்சி சென்று – உள் நுழைந்து கண்டால் – மாயா மலத்திரைகள் 7ம் எல்லாம் தீக்கிரையாகிவிடும் 36 மாயா தத்துவங்கள் எல்லாம் ஒடுங்கி விடும்
ருத்திரனின் நடத்தை தரிசிக்கலாம் இங்கே கூற்றுவன் = மரணத்தை கொடுக்கும் ருத்திர மூர்த்தி ஆவார் எமன் அல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.