Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, May 6, 2026
காக புஜண்டர் ஞானம் 80 – 8
காக புஜண்டர் ஞானம் 80 – 8
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா! வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங் கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
பொருள் :
இந்த பாடலில் நாடிகளின் உண்மை நிலவரம் பற்றி எடுத்துரைக்கிறார்
ஆன்ம ஸ்தானத்தில் சோமசூரியாக்கினிக்கலைகள் ஒன்று கூடி கலந்து நிற்கும் – அது பின்னி பிணைந்து கீழ் இறங்கி கண்ணில் சூரிய சந்திரராய் - அதன் ஒளியாய் நிற்கும்
மேலும் சுழுமுனையில் இருந்தும் இந்த கலைகளின் நாடிகள் விழுது போல் கீழ் இறங்கி இரு கண்னில் ஒளி விடும் பாரே
இடகலை பிங்களை சுழுமுனை நாடிகள் குறித்து உரைக்கிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.