Saturday, May 9, 2026

வள்ளுவரும் வள்ளல் பெருமானும் - பாகம் 2

வள்ளுவரும் வள்ளல் பெருமானும் - பாகம் 2 வள்ளுவரும் வள்ளல் பெருமானும் - திருவடிப் பெருமை - சாகாக்கல்வி - மரணமிலாப் பெருவாழ்வு வள்ளுவர் தன் முதல் 10 குறளில் இறைவன் திருவடி பெருமை பற்றி பாடியுள்ளார் வள்ளல் பெருமானும் - திருவடிப் பெருமை - திருவடிப் புகழ்ச்சி என்று நிறைய பாடியுள்ளார் வள்ளல் தேவர் குறளில் சாகாக்கல்வி பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது என்று கூறியுள்ளார் மாணிக்க வாசகர் - திருமூலர் கூட திருவடிப் பற்றி பாடியுள்ளனர் திருவடி இல்லாமல் பிறவி கடக்க முடியாது என்பது உண்மை - இன்னும் நிறைய இலாபங்கள் உள 1 வள்ளுவர் 1.தனக்குவமை இல்லாதான் "தாள்" சார்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது 2 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் 'அடி"சேரா தார் 3 அறவாழி அந்தணர் " தாள்"சார்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது நான் எல்லா குறளையும் குறிப்பிடவில்லை - உதாரணத்துக்கு தான் சொல்லி உள்ளேன் 2 வள்ளல் பெருமான் 1 திருவடிப் பெருமை 2 திருவடிப் புகழ்ச்சி எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் " தாளை" ஏத்து இப்படிபட்ட பெருமையுடைய திருவடியை நம் சமகாலத்து யோகா குரு மார்கள் - சத்குருக்கள் - மகரிஷிகள் - தத்துவ ஞானிகள் - பண்டிதர்கள் - பகவான்கள் கண்டு கொள்ளவே யில்லை - அவர்களுக்கு இந்த திருவடி பற்றி அறிவோ - விழிப்புணர்வோ இல்லை - அதனாலேயே அதை வைத்துத்தான் தவமே என்பதை அறியாமலே மற்ற எல்லாம் செய்து இறுதியில் மாண்டே போயினர் அவர்களுக்கு திருவடி வழி காட்டவில்லை - சாகாக்கல்வி - மரணமிலாப் பெருவாழ்வுக்கு தற்போதைய சன்மார்க்கத்தவர்கள்" தாள்" என்ன என்று தெரியாததால் எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் " தாளை" ஏத்து - வள்ளல் பெருமான் என்பதை எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் " தனையே" ஏத்து என்று மாற்றிவிட்டனர் அத்தகைய பரிதாப சூழலில் சன்மார்க்கமும் சன்மார்க்கத்தவர்களும் இருக்கின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை திருவாசகம் - சிவ புராணம் முழுதும் இறைவன் அடி பற்றித் தான் உள்ளது - இதை சமயம் என்று ஒதுக்கி விடுவர் சன்மார்க்கத்தவர்கள் - அதனால் தான் அறிவில் வளர்ச்சி காணாமல் இருக்கின்றார்கள் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.