Tuesday, May 12, 2026

மாயை எத்தகையது ??

மாயை எத்தகையது ?? உண்மை சம்பவம் – காஞ்சி 2000 நான் திருவடி பயிற்சி வாங்கியது 1996 எங்கள் குரு ஒரு நாள் பயிற்சி பெற்ற அனைவர்க்கும் ( சுமார் 10 ) திருவாசகம் நூல் – உரையுடன் கொடுத்தார் இதை படிக்கச்சொன்னார் நான் அதை தீவிரமாக படித்தேன் ஆய்வும் செய்தேன் எல்லா ரகசியங்களும் அதில் அடக்கம் – கண் பயிற்சி – திருவடி பெருமை - ஒளி தேகம் உட்பட நான் தெரிந்து கொண்டேன் – அதை பயின்றும் வருகிறேன் ஆனால் என்னுடன் அந்த நூல் வாங்கியவர்கள் யாரும் அதை சரியாக படிக்கக்கூட இல்லை அதை அப்படியே பூசை அறையில் வைத்து பூசை செய்கிறார் என் கண்ணுக்கு தெரிந்த வரிகள் ரகசியங்கள் அவர் கண்ணுக்கு தெரியவில்லை இது இங்கு தான் மாயை மறைப்பு வேலை செய்யுது கர்மா – புண்ணியம் இல்லை தெரிந்து கொள்வதுக்கு மேலும் இந்த திருவடி பயிற்சி பெற்றவர் அனேகர் பயிற்சியே செய்வதில்லை தடை தடை – வேலை குடும்பம் ஆரோக்கியம் நிதி என ஏதோ ஒரு தடை வந்த படி உளது என்று கூறுவார் இது தான் மாயை பயிற்சி செய்வோர் – தவறாக செய்கிறார் – கண் எப்படி பயன்படுத்துவது எனத் தெரியவில்லை இங்கும் மோசம் போகிறார் இங்கும் மாயை தன் வேலை செய்யுது இப்படி எல்லாம் மாயா மலம் நம்மை ஆன்மா பக்கம் போகவிடாமல் தடுக்குது என்பது உண்மை வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.