Saturday, May 9, 2026

என் அனுபவங்கள்

என் அனுபவங்கள் “ Relationships and Connections are not accidental – They are all Intentional and planned to effect raise in our Conscious levels “ அதாவது – “ நமக்கு ஏற்படும் உறவுகள் – தொடர்புகள் – நட்புகள் எல்லாம் தற்செயலாக நடப்பதில்லை – எல்லாம் காரணமாகவும் திட்டமிட்டேயும் தான் நடத்தப்படுது நம் அறிவு நிலையில் மேலேறுவதுக்காக இதெல்லாம் ந்டக்குது “ இதை உறுதிப்படுத்தும் சில உண்மை சம்பவங்கள் , என் வாழ்வில் நடந்தவை : 1 என்னை Third Eye chakra group யாரோ சேர்த்துவிட்டார்கள் சில பதிவுகள் போட்டேன் – நெற்றிக்கண் திறப்பு அதன் அனுபவங்கள் என சில மாதம் கழித்து ஒரு பதிவுக்கு – ஒருவர் பதில் செய்தார் அதில் நான் நெற்றிக்கண் பற்றி என்ன நினைத்திருந்தேனோ அதை அப்படியே ஒற்றி எடுத்து எனக்கு மேலும் தெளிவு அளித்தார் என்னை தொடர்பு கொண்டு அதையே கூறினார் எனக்கோ மிகுந்த வியப்பு இந்த தெளிவுக்காகவும் உறுதிப்பாட்டுக்காகவும் நான் அங்கு சேர்ந்தேன் சேர்க்கப்பட்டேன் 2 ஒருவர் முக நூலில் நண்பரானார் அதிகமாக பதில் செய்யமாட்டார் என் பதிவுகள் படிக்கிறாரா கூட தெரியாது ஆனால் அவர் எனக்கு அளித்த ஒரு விளக்கம் என்னை வியப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்று விட்டது திருவாசகத்தில் வரும் ஒரு பத்திக்கு எனக்கு பல பல ஆண்டாக விளக்கம் தெரியாமல் இருந்ததை அவர் தெளிவு படுத்திவிட்டார் சிற்றின்ப யோனி பேரின்ப யோனி விளக்கம் கூறிவிட்டார் அவர் நட்பு இந்த விளக்கத்துக்காகத்தான் ஏற்பட்டது இப்படி இன்னம் நிறைய நிறைய உள்ளன காலம் கருதி நிறுத்திக்கொள்கிறேன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.