Saturday, May 9, 2026

அத்திவரதர் – தத்துவ – சன்மார்க்க விளக்கம் 2

அத்திவரதர் – தத்துவ – சன்மார்க்க விளக்கம் 2 இவர் ஆன்மா என்பதுக்கு இன்னம் பல சான்றுகள் 1 கச்சி தான் காஞ்சி ஆனது கச்சி = தாமரை அது நாத விந்து கலவை அது மிகுந்த வெப்பம் உடையதாக இருக்கும் அந்த அனுபவம் அதான் காஞ்சியும் மிக்க கடுமையான வெப்ப நகரமாக இருக்கும் ஆன்மா நாத விந்து கலவை 2 வரதர் = வரம் தருபவர் – வேண்டிய வரம் தருபவர் ஆன்மா தான் நாம் வேண்டிய வரம் அருளும் தன்மை உடைத்து ஆன்மா கற்பக விருட்சம் – காமதேனு – அஷ்ய பாத்திரம் ஆம் 3 40 ஆண்டுகள் நீருக்கடியில் இருந்து பின் தரிசனம் என்பது = நாம் அளவற்ற காலம் தவம் செய்தால் தான் ஆன்ம தரிசனம் கிட்டும் என்ற செய்தி மறைத்து வைத்துளது 40 = எண்ணிக்கை குறிப்பிடவே தானே அல்லாது சரியாக 40 ஆண்டுகளில் ஆன்ம தரிசனம் கிட்டும் என்பது கிடையாது 4 அத்தி மரம் பிராண சக்தியை அதிகம் வெளிப்படுத்தும் ஆன்மா பிராண நிலையம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.