Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, May 12, 2026
ஞானிகள் உலகமயம்
ஞானிகள் உலகமயம்
“ People Fall Out as yr Frequency Rises “ இது மேலை ஞானிகள் கூற்று
இதை தான் நம் மாணிக்க வாசகர் சுழுமுனை அனுபவம் சேர்ந்தால் என்ன நிகழும் ?? என்பதை விளக்குகிறார்
ஞானத்தாழிசை
1 சுழியாகிய முனைகண்டபின் உற்றா ருறவற்றாய்
சூதும்பல பொய்பேசிய தொழிலும் பிறர்க்கிட்டாய்
வழியாகிய துறைகண்டபின் அனுட்டானமு மாற்றாய்
வழங்கும்பல நூல்கற்றிடு நினைவும் பிறர்க்கிட்டாய்
விழியாகிய மலர் கண்டபின் உயரர்ச்சினை யற்றாய்
மெய்ந் நீறிடு திருமந்திரம் விட்டாய் சிவமுற்றாய்
அழியாப்பதி குடியேறிநை அச்சம்பல வற்றாய்
யாரொப்பவர் நிலயுற்றவர் அலைவற்றிரு மனமே
நெஞ்சிற்பொருளாடிக்கண்டபின் நெஞ்சிற்பகையற்றாய்
நேசத்தோடு பார்மங்கையர் மேலும் நினைவற்றாய்
முஞ்சிச்சொலு முரையாண்மையும் வீம்பும் இடும்பற்றாய்
விரதங்களும் வேதங்களும் வீணாக மறந்தாய்
அஞ்சும் உடலாய்க்கண்டபின் ஆசைத்தொடர்பற்றாய்
ஆருந்திருக்கோயில் சிவம் அதுவும்தனில் உற்றாய்
தஞ்சம்எனும் ஞானக்கடல் மூழ்கிந்திற மாகித்
தாள்சேர்ந்தனை குறைவேதினி சலியாதிரு மனமே .
ஞானிகள் உலகமயம் தான்
ஒவ்வொருவர்க்கு ஒரு அனுபவம் அல்ல – எல்லார்க்கும் ஒரே அனுபவம் தான்
மக்கள் புரிந்து கொண்டால் நலம்
வ
ெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.