Tuesday, May 5, 2026

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் அருளினால் ஞானம் அடைதல்

திருமந்திரம் - ஆறாம் தந்திரம் அருளினால் ஞானம் அடைதல் காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தே ரேறி மயங்கு மவையுணர் நேயத்தே ரேறி நிமலனருள் பெற்றா லாயத்தே ரேறி யவனிவ னாமே.1651 விளக்கம்: உயிர்கள் தற்போது இந்த உடல் எனும் தேரேறி , ஐம்புலங்களும் மனதின் வசம் இருப்பதால் மாயை வசப்பட்டுள்ளன மலரகித ஜீவனாக இருக்கின்றான் தவத்தால் , மனதை இறக்கி அறிவு அன்பு எனும் தேரேறி , அதன் பயனால் சுத்த சிவத்தின் அருள் பெற்றக்கால் – பொன் ஒளி தேர் ஏறி , சிவமயமாகலாம் இறைவனாகவே ஆகலாம்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.