வள்ளல் பெருமானும் - ஆதி சங்கரரும்
“ பானையும் ஆகாயமும் “
இதை வைத்து பிரம்மத்துக்கும் நமக்குமான உறவு தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார் நம் முன்னோர் – ரிஷிகள் முனி
இதில் பானைக்குள் இருக்கும் வெளி மாதிரி தான் பிரம்மம்
அது சதா எக்காலத்தும் ஜீவனுடன் உடலுடன் உறவில் தான் இருக்கு என்ற பொருள்படவும்
ஆனால் அதனால் உடல் பத்தி கவலை படத்தேவையிலை
எப்படியாயினும் அந்த வெளியுடன் நாம் தொடர்பில் தான் இருக்கிறோமே ??
பானை உடைந்தாலும் உடையாவிட்டாலும் அந்த தொடர்பு தொடரப்போவது
இது ஒரு அறிவுப்படி நிலை
இதை மாற்றி அமைத்து இன்னும் படி மேல் விளக்குகிறார் வள்ளல் பெருமான்
அதாவது அந்த பானை மண் ஆக மட்டுமே இருந்தால் அது உடைந்து போனால் , உடல் - உயிர் பிரிவதுக்கு சமம்
மீட்டும் உடல் எடுத்தல் அவசியம் ஆகும்
ஆகையால் அந்த மண் பானை தங்கமாக மாற்றிவிட்டாலோ எக்காலத்தும் நாசமாகா தேகமாக மாறி இயற்கையுடன் ஒன்றிவிடும்
இது தான் இறுதியான அறுதியான நிலை
இது பரிணாம வளர்ச்சி படிகள்
வ
ெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.