Saturday, May 9, 2026

இயற்கை ரகசியம்

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு - பாகம் 6 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு - சத்திய ஞான சபை வடலூர் புறத்தில் சத்திய ஞான சபை எண் கோண வடிவுடையது சுற்றிலும் 21600 சங்கிலித் தொடர் கொண்ட சுவர் இந்த சங்கிலி மழையிலும் நனைந்தும் கூட துரு பிடித்ததில்லை - வள்ளலாரின் பெற்ற சித்தியின் ஆற்றல் வல்லமைக்கு எடுத்துக்காட்டு உள்ளே இரு அறைகள் நடுவே ஜோதி எழு திரை நீக்கி காண்பிக்கப்படுகின்றது அகத்தில் சத்திய ஞான சபை எண் கோண வடிவுடையது = நம் தலை சுற்றிலும் 21600 சங்கிலித் தொடர் கொண்ட சுவர் = நாம் விடும் ஒரு நாளை 21600 சுவாசம் உள்ளே இரு அறைகள் = இரு கண்கள் நடுவே ஜோதி = நெற்றி நடுவே ஆன்ம ஜோதி இருக்கின்றது - அருட்பெருஞ்சோதி அன்று எழு திரை = மூன்று மலங்கள் சுத்த உஷ்ணத்தால் மலங்கள் நீங்கினால் ஆன்ம தரிசனம் கிட்டும் என்பதனை வள்ளல் பெருமான் அக அனுபவத்தை புறத்திலே காட்டி விளக்கியுள்ளார் வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.