Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
அருட்பா – ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை
அருட்பா – ஆறாம் திருமுறை – நடராஜபதி மாலை
நடராஜபதி மாலை
திருச்சிற்றம்பலம்
2. என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
இதயத்தி லேதயவிலே
என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
என்இயற் குணம்அதனிலே
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
என்செவிப் புலன்இசையிலே
என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
என்அனு பவந்தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
தானே கலந்துமுழுதும்
தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
ததும்பிநிறை கின்றஅமுதே
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
சுகமே சுகாதீதமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
பொருள் :
எங்கெல்லாம் ஒப்பிலா சிவம் கலந்து ததும்பி நிறைந்து வழிந்து அருள் செயுது என வள்ளல் பிரான் பாடுகிறார்
என் உடலிலும் – எலும்பிலும் – அன்பிலும் – இதயத்திலும் – பெரும் கருணையிலும்
என் உயிரிலும் – அதன் உயிருக்கு உயிரிலும்
என் குணத்திலும் வாக்கிலும் நாக்கிலும் இயல்பிலும்
என் செவிப்புலனிலும் அதன் இசையிலும்
“ என் இரு கண்மணியிலும் அதனில் இலங்கும் ஒளியிலும் “
இது மிக முக்கியமானது ஆம்
என் அனுபவத்திலும் - என் அறிவிலும் - என் அறிவுக்கு அறிவிலும்
கலந்து இனிக்கின்ற சுத்த சிவசன்மார்க்க நிதியே செல்வமே – அருட்பெருஞ்சோதியே – நடராஜபதியே என பாடுகிறார் போற்றுகிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.