Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, May 9, 2026
அத்திவரதர் – தத்துவ விளக்கம்
அத்திவரதர் – தத்துவ விளக்கம்
இந்த பதிவு போடுவதுக்கு முன் நான் நிறைய படித்தும் கேட்டும் தான் இறுதி செய்து எழுதுகிறேன்
இதிகாச புராணம் : இவர் பிரம்மா செய்த யாகத்தின் பயனாக தோன்றியது
“ய”க்ஞம் = “ ய” காரமாகிய சுழுமுனை 10ம் வாசலில் செய்யும் ஞான கர்மா குறிப்பது ஆம்
இந்த வாசலில் 9 ஒளிகள் ஒன்று சேர்ந்து வருவதால் மிகுந்த வெப்பம் உண்டாகும் தன்மை உடைத்து
அதனால் பெருமாள் தன் உடல் வேக்காடு மிகுந்துள்ளதாக குறிப்பிடுகிறார்
அதனால் நீரில் வைத்துவிடுமாறு கூறுகிறார்
அத்திகிரி – அ கரத்தில் இருக்கும் தீ விளங்கும் மலை
அது சுழுமுனை மலை ஆகும்
சுழுமுனையில் விளங்குவது ஆன்மா தான்
அதனால் அத்திவரதர் = ஆன்மா ஆகும்
சுழுமுனை குணம் = சாந்தம் அமைதி அளிக்க வல்லது
உக்கிரத்தை கோபத்தை தணிக்க வல்லது
இதை தான் அந்த அத்தி பழம் தருது
அத்திப்பூ மறைந்து தான் இருக்கும்
ஆன்மா எனும் பூவும் மறைந்து தான் இருக்கு
ஆன்மா குளிர்ந்த தேன் கிண்ணம் எனும் அமுதக் கடலில் இருப்பது
அத்திவரதர் = அனந்த சரச் எனும் குளத்தில் இருக்கார்
எனவே அத்திவரதர் = ஆன்மா எனும் தத்துவம் விளக்க வந்தவர் ஆவார்
இது எனக்கு தெரிந்த வரையில் – நான் ஆய்வு செய்து கண்டுபிடித்த தத்துவ விளக்கம்
veங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.