Tuesday, May 12, 2026

திருவடி பயிற்சி விளக்கங்கள்

திருவடி பயிற்சி விளக்கங்கள் 🌻பஞ்ச முத்திரை🌻 1. கேசரி; 2. பூசரி, 3. மத்திய லக்ஷணம்; 4. ஷண்முகீ; 5. சாம்பவீ. 1. கேசரி – விழிகளை நடுவில் நிறுத்தி மேல் நோக்கி சிதாகாசத்தை (அருள் வெளியை) பார்த்துக் கொண்டிருத்தல். 2. பூசரி – விழிகளை அசைக்காமல் தன் மூக்கு நுனிக் குறியில் நோக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல். 3. மத்திய லக்ஷணம் – கண்களை அரைப் பார்வையோடு மூடிக் கொண்டு மூக்கு மத்தியில் நோக்கை நிறுத்திப் பார்த்துக் கொண்டிருத்தல். 4. ஷண்முகீ – காதுகளையும், கண்களையும், மூக்கையும், வாயையும், விரல்களால் மூடி, வெளிப்பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பிக் கண் விழிகளை நடுவே நிறுத்தி நாத (பிராணன்), பிந்து, (மனம்) களை (புத்தி) என்பனவற்றை ஒன்றாய் சேர்த்தல். 5. சாம்பவீ – விழிகளை இமை கொட்டாமல் திறந்து பார்வையை அருள் வெளியான சிதாகாசத்தில் நிறுத்தி அங்குள்ள விந்தை மண்டலங்களைப் பார்த்துச் சொக்கியிருத்தல். இந்த 5 முத்திரைகளில் 4 ஷண்முகி முத்திரை முதலில் கற்றுக்கொடுப்பர் பின் கண்ணாடி பயிற்சி பின்னர் சாம்பவி அ கேசரி கற்றுக்கொடுப்பர் இந்த சாம்பவியும் கேசரியும் ஒவ்வொருவர்க்கு வித்தியாசம் இருக்கு திருமந்திரத்தில் இதன் முறை வேறு விதமாக இருக்கு வெங்கடேஷ் See less

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.