Tuesday, May 12, 2026

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் ஒத்தது = இரண்டு கலக்கின்ற இடம் – இரு திருவடிகள் சேர்கின்ற இடம் = மேடும் பள்ளம் இல்லாமல் சமமாக இருக்கும் இடம் = இரு வினைகளும் சமமாகின்ற இடம் அந்த இடம் சுழிமுனை ஆகும் – இந்த இடத்திற்கு வருவதற்கு வழி /பயிற்சிகள்/சாதனை தெரிந்தவன் என்றென்றும் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் = சுழிமுனைக்கு வழி தெரியாதவர்கள் இறந்து விடுவர் திரண்ட கருத்து : யார் இரு வினையும் – திருவடியும் ஒத்துப் போகும் இடம் தெரிந்தவரோ அவர் நீடூழி வாழ்வாங்கு வாழ்வர் – மற்றவரெல்லாம் செத்துப் போவர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.