காக புஜண்டர் ஞானம் 80 – 62
நிலையாத சமுத்திரமே சுழுத்தி யாச்சு; நின்றிலங்கும் வாசியைத்தான் வெளியிற் சேரு
தலையான அக்கினியப் படியே சேரு; சத்தியமாய் ரவிமதியைக் கூடச் சேர்த்து மலையாமல் ஏகபரா பரனே யென்று மனமடங்கி அண்டவுச்சி தன்னைப் பார்க்க அலையாது மனந்தானும் பரத்திற் சென்று ஆகாய வீதிவழி யாட்டும் பாரே.
பொருள் :
சோமசூரியாக்கினி கலைகளுடன் வாசி கலக்கச்செய்து அதை அண்டவுச்சியாகிய சுழுமுனைக்கு ஏற்றினால் மனம் தான் அலையாமல் அடங்கி ஆன்மாவில் அடங்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.