Friday, May 1, 2026

அருட்பா – 6ம் திருமுறை நடராஜபதி மாலை

அருட்பா – 6ம் திருமுறை நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்சோதி பெருமை நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம்உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின் ஞானமெய்க் கொடிநாட்டியே மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம் முன்னிப் படைத்தல்முதலாம் முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம் மூர்த்திகளும் ஏவல்கேட்ப வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்யஇன்ப மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்துமரசே சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரியநடு நின்றசிவமே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட ராஜபதியே. பொருள் : ஆறு அந்தங்கள் – யோகாந்தம் – சித்தாந்தம் – நாதாந்தம் – போதாந்தம் கலாந்தம் - வேதாந்தம் ஆகியவற்றினுள் எல்லாம் கலந்து அதனினும் மேல் விளங்கி உண்மை அறிவு நாட்டியும் அண்ட கோடிகளிலும் சராசரங்கள் – அவை படைத்து காத்து அழித்தும் மேலும் இரு தொழிலாகிய மறைப்பு அருளல் இயற்றும் அதன் தலைவர்கள் எல்லாம் இட்ட பணி செய்ய காத்துக்கிடக்கவும் , எண்ணில் சத்தி சத்தர்கள் எல்லாம் பணி செய்யும் இன்ப வெளியில் அருள் செங்கோல் கொண்டு ராஜ்ஜியம் நடத்தும் நடராஜரே , தூய உள்ளத்தில் என்றும் கலந்திருக்கும் அன்பே , சுத்த சிவ சன்மார்க்க செல்வமாகிய அருட்பெருஞ்சோதி – நடம் இயற்றும் பதி ஆகிய நடராஜ பதியே என ஆடல் வல்லானின் பெருமை திறம் பாடுகிறார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.