Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, May 1, 2026
அருட்பா – 6 திருமுறை - நடராஜபதி மாலை
அருட்பா – 6 திருமுறை - நடராஜபதி மாலை
திருச்சிற்றம்பலம்
உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
உள்ளனஎ லாங்கலந்தே
ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
உதயாத்த மானம்இன்றி
இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
ஏகமாய் ஏகபோக
இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
இலங்நிறை கின்றசுடரே
கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
ககன்எலாம் கண்டபரமே
காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
கண்காண வந்தபொருளே
தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த்
துணையாய் விளங்கும்அறிவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.
பொருள் :
என் உடல் உயிர் – ஆன்மா எல்லாவற்றிலும் கலந்து அதனால் அதை எல்லாம் இருள் நீக்கி - ஒளிமயமாக்கி – எக்காலத்துக்கும் தோற்றம் அஸ்தமனம் இலாததாக்கி
எல்லா சித்தியும் இயற்றும் ஒரே சிவசத்தி ஒளியாகி – இன்ப வெளி எனும் சிற்சபை நடுவே அருள் நடம் இயற்றும் பூரண ஒளியே
யாரும் காணா பொருள் என எல்லா கலைகளும் கூற ஆனால் என் கண்கள் காண செய்த பொருளே
எனக்குள் அகத்திலும் புறத்திலும் உண்மைத்துணையாய் விளங்கும் அறிவே
அது சுத்த சிவ சன்மார்க்க செல்வமாகிய அருட்பெரு ஞ்சோதி – நடம் இயற்றும் பதி ஆகிய நடராஜ பதியே என ஆடல் வல்லானின் பெருமை திறம் பாடுகிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.