Friday, May 1, 2026

அருட்பா – 6ம் திருமுறை நடராஜபதி மாலை

அருட்பா – 6ம் திருமுறை நடராஜபதி மாலை வள்ளலுக்கு இறைவன் கூறிய அறிவுரை வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கிஒருநாள் மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை மறந்துதுயில் கின்றபோது நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை நன்றுற எழுப்பிமகனே நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ நலிதல்அழ கோஎழுந்தே ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண் டின்புறுக என்றகுருவே என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபே ரின்பமே என்செல்வமே வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்தசுகமே மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே மேவுநட ராஜபதியே. பொருள் : நான் சிறியவன் கவலையுடன் என் செய்வது என அறியாது திகைத்து இருந்த போது , நான் உலகை மறந்து தூங்கி இருந்த போது – இறை அருட்பெருஞ்சோதி என்னருகே வந்து அணைத்து என்னை துயில் எழுப்பி – இந்த மாதிரி யோக தவம் செய்யாமல் தூங்கி காலம் கழித்தல் நல்லதோ ?? அழகோ?? அதனால் தவம் செய்க – அருளமுதம் உண்க - களிக்க என உரைத்த ஞான ஆசிரியரே என கூறும் போது – இதெல்லாம் சன்மார்க்கத்தில் இல்லை என பகரும் நம் மக்களை என் சொல்வது ?? மும்மல பேதத்தில் – சகலர் – மும்மலம் பிரளாயகலர் – இரு மலம் விஞ்ஞானகலர் - ஒரு மலம் – இதில் விஞ்ஞானகலரில் கலந்து நிற்கும் ஆடல் அரசே நடராஜபதியே என பாடுகிறார் வள்ளல் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.