வாழ்க்கையின் நிதர்சன உண்மை - 55
ஒரு துளை போடும் உபகரணம்
எப்படி தன் மையம்
அமரும் முன் ஆடுகிறதோ
மையம் நின்ற பின்
ஆட்டம் நிற்குதோ
அப்படியே தான் சாதனத்திலும்
மனமும் தான் ஓரிடத்தில்
குவியும் முன்
ஆடும் ஆடும் ஆட்டம் போடும்
தன் நிலை சேர்ந்த பின்
ஆட்டம் நின்று ஒடுங்கிவிடும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.