Friday, May 1, 2026

அன்பர் சந்தேகம் – 4

அன்பர் சந்தேகம் – 4 உண்மை சம்பவம் – 2019 கோவை அவர் : நீங்கள் எல்லா உண்மைகளையும் ரகசியங்களையும் போட்டு உடைத்து விடுகிறீர்கள் – இது தவறு என சித்தர் உரைத்திருக்கிறார்களே ?? நான் : ஆமாம் அப்படி சொன்னால் மண்டை சிதறிவிடும் என்றிருக்கார் எனக்கு ஆகிவிட்டதா ?? அப்படி ஆகியிருந்தால் நான் இறந்து 20 ஆண்டுகள் ஆகி இருக்கணும் அந்த இடத்தில் புல் பூண்டு முளைத்திருக்கோணும் ஆகிவிட்டதா ?? அதெல்லாம் பயமுறுத்துவதுக்கு தவறானவன் கையில் சிக்கி விடக்கூடாது என்பதுக்காக செயப்பட்ட ஏற்பாடு – தற்போது த நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகள் மாதிரி நான் உண்மை உரைப்பதால் மக்களுக்கு அந்த உண்மைகள் புரிந்துவிட்டதா ?? இல்லையே இப்போதும் பழைய தெளிவில்லா நிலையில் தான் இருக்கார் என் பதிவுகள் படித்தபின்னும் 1 முத்தி 2 8*2 3 சாவேபோ 4 காயகல்பம் 5 பொற் சபை சித்சபை இதுக்கெல்லாம் தப்பாக பொருள் சொல்கிறார் – பின் படித்து என் பயன் ?? இன்னமும் தெளிவு பெறவிலை அவர்க்கு இந்த உண்மைகள் விளங்கவே இல்லை என்பது தான் உண்மை - நான் சொல்வதை அவர் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லை என்பதுவும் உண்மை நான் கூறும் பயிற்சி - இந்த வகை சாதனம் எல்லாம் எங்கும் சொல்லப்படவில்லை என்று கூறுகிறார் இந்தப் பயிற்சியில் ஏதோ சந்தேகம் வந்து – வெளியில் சொல்ல முடியா காரணம் கொண்டு – வேறு குருவிடம் வித்தை கற்க சென்றுவிடுகிறார் மேலே செல்ல அழைத்தாலும் விரும்பி கற்க வரமாட்டேன் என்கிறார் எத்தனையோ பேர் முதல் கட்டத்துடன் நின்றிருக்கார் ? அனேகர் ரெண்டாம் கட்டத்துடனே நின்றிருக்கார் ?? கற்க விருப்பமில்லை – பயிற்சி இல்லை அதனால் அனுபவமில்லை கோடியில் ஒருவன் தான் கோவணாண்டி என்று சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதால் – இந்த வெளிப்பட்ட உண்மைகள் ரகசியங்கள் யார்க்கு பயன்பட வேணுமோ அவர்க்குத்தான் பயனளிக்கும் அல்லாது –எல்லார்க்கும் அல்ல என்றேன் இந்த உண்மைகள் யாவும் புண்ணியம் யார்க்கு மிக மிக அதிகமா இருக்கோ அவர்க்கே வேலை செய்யும் – அவர்க்கு தான் புரியும் சிலர்க்கு புரிந்தாலும் அனுபவத்துக்கு வருவது அரிதாக இருக்கும் – தடைகள் இருக்கும் இப்படி பலப்பல படிகள் இருப்பதால் உண்மை வெளிப்படுத்தவதால் ஒன்றும் ஆகிவிடாது என்றேன் இதனால் எனக்கு புண்ணியம் தானே அல்லாது பாவமோ – குரு துரோகமோ ஆகாது என்றேன் என் பதிவுகள் படித்து தெளிந்து வழிக்கு வந்திருந்தால் இந்த நேரத்துக்கு ஆயிரம் ஞானிகள் அல்லவா உருவாகியிருக்க வேணும் என்றேன் அப்படி நடக்கவிலையே – ஆதலால் உண்மை உரைப்பதால் ஒரு பாவமுமில்லை ஆனால் சிலர் இது எனக்கு சொல்வதுக்கு உத்தரவில்லை என்பர் அதெல்லாம் மூட நம்பிக்கை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.