காய கல்பம் முறை – திருமந்திரம் -2
காயகல்ப முறை – திருமூலர்
நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே
பொருள் :
மனதை புருவ மையத்தில் கண்ணால் சலனமில்லாமல் ஸ்தாபித்து நிற்க வைத்தால் – அதனால் எல்லாம் சமமாகி , நாடிகள் – குணங்கள் – சமமாகி உடல் நோயற்ற தன்மை எய்தும்
மனித உடலுக்கு வரும்4448 நோய்களில் இருந்து விடுதலை கிட்டும்
உடலும் பாலகன் நிலை அடையும் – அதாவது மீட்டும் உடல் இளமை அடையும் என்றவாறு
உலகில் எல்லாரும் புருவ மைய தியானம் தான் செய்கிறார்
ஆனால் யார்க்கும் உடல் காயகல்பம் அடையவில்லையே - இளமை அடையவில்லையே ?? இது விசித்திரம் தானே ?
அதனால் இது என்ன சொல்லவருது எனில் ??
இது ஒரு வரிதான்
ஆனால் இதனுள் ஆயிரம் அனுபவம் வர வேண்டி இருக்கு என்பது தான் இதனுள் அடக்கம்
அதாவது எப்படி ?? அவன் வீடு கிரகப்பிரவேசம் செய்தான் எனில் ??
அவன் இடம் வாங்கினான் அதுக்கு கடன் வாங்கினான்
பின் நிறைய வேலைகள் செய்து - பல காலம் - செல்வம் செலவழித்து வீடு கட்டி முடித்து – அதன் பின் புது மனை குடி புகுந்தான் என்பது தான் பொருள்
அதனுள் ஆயிரம் ஆயிரம் பணிகள் மன உளைச்சல்கள் உள்ளன போல் தான் இந்த மந்திரப்பாடல்
ஒரு வரி அல்ல இதன் பொருள் – அதனுள் ஓராயிரம் அர்த்தம் அடக்கம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.