Saturday, May 9, 2026

இயற்கை நியதி

இயற்கை நியதி 1. நம் கர்மாவை நாமே அனுபவிக்கச் செய்வது - அதை செய்வதற்கு 36 தத்துவங்கள் துணை கொண்டு நடத்துகின்றது 2. ஒன்றைக் கொடுத்துத் தான் ஒன்றைப் பெற முடியும் உழைப்பு கொடுத்து தான் பணம் சம்பாதிக்க முடியும் உடற்பயிற்சி செய்து தான் ஆரோக்கியம் பெற முடியும் அப்படியெனில் ஆன்மா - அருட்பெருஞ்சோதி அனுபவம் பெற என்ன கொடுக்க வேண்டும்?? நாம் நிறைய இழக்கத் தயாராக இருக்க வேண்டும் - நிறைய சுகங்களை இழக்கத் தயாராக இருக்க வேண்டும் 1. உடல் - பொருள் - ஆவி தத்தம் கொடுக்க வேண்டும் 2 ஜீவ - தேக - போக சுதந்திரம் விட்டுக் கொடுக்க வேண்டும் 3 அறம் - பொருள் - இன்பம் துறக்க தயாராக இருக்க வேண்டும் இவைகள் எல்லாம் இழந்தால் தான் ஆன்மா - அருட்பெருஞ்சோதி அனுபவம் கிட்டும் எப்படி அர்ஜுனனுக்கு குறியான பறவை மட்டும் அவன் கண்ணுக்கு தெரிந்ததோ அது போல நம் குறிக்கோள் - எண்ணம் - இலட்சியம் எலாம் ஆன்மா - அருட்பெருஞ்சோதி ஆக மட்டும் இருக்க வேண்டும் - வேறு எந்த எண்ணம் இருக்கக் கூடாது - தடம் மாறக் கூடாது அப்படி இருந்தால் மட்டும் ஆன்மா - அருட்பெருஞ்சோதி அனுபவம் சாத்தியம் ஆகும் - இல்லையெனில் அதனை மறந்து விட வேண்டியது தான் br> ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.